சிங்கப்பூர் exclusive
"சிங்கப்பூரை மேலும் அழகாக்குவது என் கனவு"
வாசிப்புநேரம் -
NParks
'இயற்கையின் மத்தியில் ஒரு நகரம்...' என்று உருமாறுகிறது சிங்கப்பூர்....
அதை மேலும் அழகாக்க எண்ணுகிறார் 20 வயது பவனேஷ் ராஜ்.
நிலவனப்பு, தோட்டக்கலை, விலங்கு அறிவியல், விலங்கு மருத்துவம் போன்ற துறைகளில் பணியாற்ற விரும்பும் 220-க்கும் அதிகமான இளையர்களுக்கு NParks-Peter Lim உபகாரச் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் நிலவனப்பு, வடிவமைப்புப் படிப்பை மேற்கொள்ளும் பவனேஷ் உபகாரச் சம்பளத்தைப் பெற்றவர்களில் ஒருவர்.
அவர் தமது சிறுவயது மோகத்தை வாழ்க்கைப் பணியாக மாற்ற எண்ணுகிறார்.
"எனக்கு சிறு வயதிலிருந்தே செடிகள் என்றால் மிகவும் பிடிக்கும். சுற்றுச்சூழலை மேம்படுத்தக் கூடுதல் திறன்களை கற்றுக்கொள்ள விரும்புகிறேன்," என்றார் அவர்.
"சிங்கப்பூர் இன்னும் பசுமையாக இருக்கவேண்டும்...சிங்கப்பூரர்கள் வாழ்வதற்கு அழகிய இடத்தை உருவாக்கவேண்டும்..." இதுவே பவனேஷின் கனவு.
'சிங்கப்பூர் ஒரு பெரிய நாடு இல்லை...இங்கு தோட்டக்கலையைக் கற்று என்ன செய்வது?'
'வேலை வாய்ப்புகள்தான் இருக்குமா?'
என்று சிலர் கேள்விகளை எழுப்பலாம்.
பவனேஷுக்கு எந்த ஐயமும் இல்லை.
தம்மைப் போல் மற்றவர்களையும் நம்பிக்கையுடன் துறையில் அடியெடுத்து வைக்கச் சொல்கிறார் அவர்.
2030 பசுமைத் திட்டத்தின்படி சிங்கப்பூரை 'இயற்கையின் மத்தியில் ஒரு நகரமாக' மாற்றத் திட்டமிடப்படுகிறது.
பல்லுயிர்ச் சூழலில் மக்கள் வாழ்வதைச் சாத்தியப்படுத்த சிங்கப்பூர் பல்வேறு முயற்சிகளை எடுக்கிறது.
"அப்படியென்றால் பல வேலை வாய்ப்புகள் உருவாகும். தோட்டக்கலை நிபுணர், நிலவனப்பு வடிவமைப்பாளர், மரப் பராமரிப்பாளர்...போன்றவர்கள் தேவைப்படுவார்கள். கவலையின்றித் துறைக்குள் வரமுடியும்," என்று பவனேஷ் சொன்னார்.
சிங்கப்பூரின் பெரும் செல்வந்தரான திரு பீட்டர் லிம்மின் ஆதரவில் தேசியப் பூங்காக் கழகம் உபகாரச் சம்பளத்தை வழங்குகிறது.
அவர் உபகாரச் சம்பளத்துக்காக 10 மில்லியன் வெள்ளி நிதி அளித்துள்ளார்.
2020ஆம் ஆண்டிலிருந்து 1.9 மில்லியன் வெள்ளி உபகாரச் சம்பளத்துக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தொழில்நுட்பக் கல்விக்கழகம், பலதுறைத் தொழிற்கல்லூரிகள், உள்ளூர்ப் பல்கலைக்கழகங்கள் போன்றவற்றில் படிக்கும் மாணவர்கள் பயனடைகின்றனர்.

ஆதாரம் : Mediacorp Seithi