Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தோ பாயோவில் காகங்களைப் பிடிக்கப் பொறி - கண்காணிக்க கேமராக்கள்

வாசிப்புநேரம் -
தோ பாயோவில் காகங்களைப் பிடிக்கப் பொறி - கண்காணிக்க கேமராக்கள்

(படம்: CNA/Javier Lim)

தோ பாயோ (Toa Payoh) லோரோங் 7 இல் காகங்களைப் பிடிக்கப் பொறியும் அதில் சிக்கிக்கொண்ட காகங்களைக் கண்காணிக்க கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

தேசிய பூங்காக் கழகம் அதனைத் தெரிவித்தது.

அந்தப் பகுதியில் காகங்கள் பற்றிப் பொதுமக்கள் புகார் அளித்ததைத் தொடர்ந்து அந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

2020க்கும் 2022க்கும் இடைப்பட்ட காலத்தில் பதிவான புகார்களின் எண்ணிக்கை ஆண்டுக்குச் சராசரியாக 3,000 முதல் 4,000 வரை இருந்ததாகத் தேசிய பூங்காக் கழகம் கூறியது.

காகங்கள் எழுப்பும் சத்தம், அவற்றின் நடமாட்டம், அவற்றுக்குத் தீனி இடுவது, அவை மக்களைத் தாக்குவது போன்றவை புகார்களில் அடங்கும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்