Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

NRICஇன் கடைசி 3 எண்களையும் ஓர் எழுத்தையும் மட்டும் வெளியிடும் போக்கில் மாற்றம் - என்ன எதிர்பார்க்கலாம்?

வாசிப்புநேரம் -
 NRICஇன் கடைசி 3 எண்களையும் ஓர் எழுத்தையும் மட்டும் வெளியிடும் போக்கில் மாற்றம் - என்ன எதிர்பார்க்கலாம்?

படம்: CNA

சிங்கப்பூரர்கள் அடையாள அட்டை (NRIC)
எண்களைப் பயன்படுத்தும் முறைகளைப் பற்றி தங்களது சிந்தனைகளை மாற்றுமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டது.

அடையாள அட்டை எண்களைப் பொறுப்பான முறையில் கையாளவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

1. NRIC குறித்து என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது?

NRICஇன் கடைசி 3 எண்களையும் ஓர் எழுத்தையும் மட்டும் வெளியிடும் போக்கை மாற்ற அரசாங்கம் திட்டமிடுவதாகத் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் தியோ தெரிவித்துள்ளார்.

அது குறித்து தனியார்துறையுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

2018ஆம் ஆண்டில் NRICஇன் கடைசி 3 எண்களையும் ஓர் எழுத்தையும் மட்டும் வெளியிடுமாறு அரசாங்கம் மக்களிடம் ஆலோசனை கூறியிருந்தது.

2. மாற்றத்திற்கான காரணம்?

NRICஇன் கடைசி 3 எண்களையும் ஓர் எழுத்தையும் மட்டும் வெளியிடுவது பாதுகாப்பானது எனும் தவறான மனப்போக்கு ஏற்பட்டுள்ளது. ஒருவரின் பிறப்பு ஆண்டு தெரிந்தால், முழு NRIC எண்களை எளிதில் கண்டுபிடித்துவிடக்கூடும். பயனீட்டாளர்கள் பாதிக்கப்படலாம்.

3. NRICஇன் கடைசி 3 எண்களையும் ஓர் எழுத்தையும் மட்டும் வெளியிடும் போக்கு மாறினால்....

அனைத்து எண்களையும் எழுத்துகளையும் வெளியிடவேண்டும் என்று அர்த்தமில்லை. தேவைப்படும்போது மட்டும் NRIC எண்களைக் கொடுத்தால் போதும்.

உதாரணத்திற்கு நோயாளிக்குச் சிகிச்சை அளிப்பதற்கு முன்னர் அல்லது மருந்து தயாரித்துக் கொடுப்பதற்கு முன்னர் ஒருவரின் NRIC எண்களை முழுமையாகக் கேட்டுக்கொள்ளலாம்.

அதிர்ஷடக் குலுக்கு அல்லது ஒரு மன்றத்தில் உறுப்பினராகச் சேரும்போது NRIC எண்களைக் கேட்பதற்குப் பதிலாக வேறு வழிகளைக்கொண்டு ஒருவரை அடையாளம் காணலாம்.

4. NRIC எண்களைப் பயன்படுத்திக் கணக்குகளை உறுதிசெய்வதை ஏன் தவிர்க்கவேண்டும்?

அது பாதுகாப்பானது அல்ல. ஒருவரின் அடையாள அட்டை எண்கள் வேறு ஒருவருக்குத் தெரிந்திருந்தால் அது தவறான வழியில் பயன்படுத்தப்படலாம்.

5. NRIC எண்களை மட்டும் வெளியிடுவதற்கும் அடையாள அட்டையைக் (NRIC card) காட்டுவதற்கும் என்ன வித்தியாசம்?

NRIC அடையாள அட்டையில் எண்களோடு சேர்த்து ஒருவரின் படமும் விரல்ரேகையும் இடம்பெற்றிருக்கும். அதனைக் காட்டி ஒருவரின் அடையாளத்தை உறுதிசெய்யலாம்.

NRIC எண்களை மட்டும் வைத்து ஒருவரின் அடையாளத்தை உறுதிசெய்ய இயலாது.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்