Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சக தேசியச் சேவையாளரிடம் தகாத செயல்: குற்றத்தை ஒப்புக்கொண்ட மூவர்

வாசிப்புநேரம் -
சக தேசியச் சேவையாளரிடம் தகாத செயல்: குற்றத்தை ஒப்புக்கொண்ட மூவர்

படம்: கோப்புப் படம்/State Courts in Singapore

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 05 Nov 2026 04:16PM புதுப்பிப்பு : 05 Nov 2026 05:59PM

சிங்கப்பூர்க் காவல்துறையில் முழுநேர தேசியச் சேவையாற்றியபோது சக சேவையாளரைப் படுக்கையில் அழுத்திப் பிடித்துத் தகாத முறையில் நடந்துகொண்ட மூவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.

25, 23, 26 வயதுடைய அவர்கள் இன்று நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

சம்பவம் 2023இல் ஆகஸ்ட்டுக்கும் செப்டம்பருக்கும் இடையே நடந்தது.

21 வயது சேவையாளர் படுக்கையில் படுத்திருந்தவாறு கைத்தொலைபேசியில் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது அந்த மூவரும் அவரது கைகளையும் கால்களையும் அழுத்திப் பிடித்தனர்.

பின்னர் அவர்கள் தகாத முறையில் நடந்துகொண்டனர்.

அதனால் பாதிக்கப்பட்டவர் அவமானமும் அருவருப்பும் அடைந்தார்.

குற்றத்தை ஒப்புக்கொண்ட 26 வயது ஆடவர் மற்றொரு 21 வயது சேவையாளரிடமும் தகாத முறையில் நடந்துகொண்டதாக ஒப்புக்கொண்டார்.

மூவரும் தங்கள் செயல்களுக்காக வருத்தம் தெரிவித்துப் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்புக் கேட்டதாகத் தற்காப்பு வழக்கறிஞர் கூறினார்.

அவர்களுக்குக் குறுகியகாலத் தடுப்புக் காவலும் சமூகச் சேவை உத்தரவும் விதிக்க அரசாங்க வழக்கறிஞர் கோரினார்.

சமூகச் சேவைக்கு மூவரும் தகுதியானவர்களா என்பதை மதிப்பிட நீதிபதி உத்தரவிட்டார்.

தண்டனை பற்றிய அறிவிப்பு டிசம்பருக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்