Skip to main content
வடக்கு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

வடக்கு-தெற்கு ரயில் பாதையில் தடங்கல் - சேவைகள் வழக்கநிலைக்குத் திரும்பின

வாசிப்புநேரம் -
வடக்கு-தெற்கு ரயில் பாதையில் ஏற்பட்ட தடங்கல் சரிசெய்யப்பட்டுள்ளது.

ரயில் சேவைகள் காலை 10.12 மணியிலிருந்து வழக்கநிலைக்குத் திரும்பியதாக SMRT நிறுவனம் அதன் Facebook பக்கத்தில் குறிப்பிட்டது.

"இன்று காலை 9.25 மணியளவில் வடக்கு-தெற்குப் பாதையில் சமிக்ஞைக் கோளாறு ஏற்பட்டது. அங் மோ கியோ நிலையத்திற்கும் சுவா சூ காங் நிலையத்திற்கும் இடையில் இருவழிகளிலும் பயணிகள் 15 நிமிடம் வரை கூடுதல் பயண நேரத்தை எதிர்பார்க்கலாம். தடங்கலைச் சரிசெய்யப் பொறியாளர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்," என்று SMRT நிறுவனம் இதற்கு முன்னர் பதிவிட்டிருந்தது.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்