உடற்பயிற்சி செய்தபோது மயங்கிவிழுந்த தேசியச் சேவையாளர் இதய நோயால் மாண்டார்
காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்: Google Maps
உடற்பயிற்சியின்போது மயங்கிவிழுந்து மாண்ட 25 வயது தேசியச் சேவையாளருக்கு இதய ரத்தக் குழாய் நோய் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
பிரேதப் பரிசோதனை முடிவுகள் குறித்துத் தற்காப்பு அமைச்சும் சுகாதார மேம்பாட்டு வாரியமும் கூட்டறிக்கையை வெளியிட்டன.
ஆடவருக்கு coronary artery disease அதாவது இதயத்தை நோக்கி உயிர்வாயு ஏந்திச் செல்லும் ரத்தக் குழாயில் நோய் இருந்ததாகக் கூறப்பட்டது.
ஆடவர் கடந்த புதன்கிழமை (2 மார்ச்),
வெஸ்ட் கோஸ்ட் (West Coast) பூங்காவில்
தேசியச் சேவையாளர்களுக்கான உடலுறுதிப் பயிற்சியில் ( NS FIT) பங்கேற்றார்.
அப்போது HIIT எனும் high-intensity interval training உடற்பயிற்சி மேற்கொள்ளப்பட்டது..
ஆடவர் பயிற்சியில் திடீரென்று மயங்கிவிழுந்ததைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவர் மாண்டதாகப் பின்னர் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், உடலுறுதிப் பயிற்சிகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மறுஆய்வு செய்யப்படுவதாக வாரியம் கூறியுள்ளது.
HIIT உடற்பயிற்சி வகுப்புகளும் தற்காலிகமாக ரத்துசெய்யப்பட்டுள்ளன.
- CNA