Skip to main content
வேலைப் பாதுகாப்பு மன்றத்தைப் புதுப்பிக்கவிருக்கும் NTUC
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

வேலைப் பாதுகாப்பு மன்றத்தைப் புதுப்பிக்கவிருக்கும் NTUC

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் வேலைப் பாதுகாப்பு மன்றத்தைப் புதுப்பிக்கவிருக்கிறது.

நிறுவனங்களும் ஊழியர்களும் புதிய மாற்றங்களுக்கேற்பத் தயார்ப்படுத்திக்கொள்ள அது உதவும்.

வளர்ந்துவரும் செயற்கை நுண்ணறிவுப் போக்குகளைப் பயன்படுத்தவும் உதவி வழங்கப்படும்.

தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் தலைமைச் செயலாளர் இங் சீ மெங் தமது தேசிய தினச் செய்தியில் அதைத் தெரிவித்தார்.

நிறுவனப் பயிற்சிக் குழுக்களை அமைப்பது போன்ற முயற்சிகள் தொடரும் என்றார் அவர்.

இதுவரை அத்தகைய 3,300 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று திரு இங் சொன்னார்.

வரவுசெலவுத் திட்டத்தில் மேலும் 200 மில்லியன் வெள்ளி ஒதுக்கப்பட்டிருப்பதால் முயற்சிகளைச் சிறப்பாகவே தொடரலாம் என்றார் அவர்.

அனைத்து ஊழியர்களுக்கும் காங்கிரஸ் ஆதரவாக இருக்கும் என்று திரு இங் உறுதியளித்தார்.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்