Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

NTUC Health தாதிமை இல்லங்களில் கூடுதலான நீக்குப்போக்குப் பராமரிப்புத் தெரிவுகள்

வாசிப்புநேரம் -
     NTUC Health தாதிமை இல்லங்களில் கூடுதலான நீக்குப்போக்குப் பராமரிப்புத் தெரிவுகள்

(படம்: Pixabay)

வெளியீடு : 27 Jan 2023 10:50PM புதுப்பிப்பு : 27 Jan 2023 10:59PM

சிங்கப்பூரின் ஆகப்பெரிய தாதிமை இல்ல நிர்வாக அமைப்பான NTUC Health கூடுதல் நீக்குப்போக்கான பராமரிப்புத் தெரிவுகளை வழங்குகிறது.

இனி மூத்தோர் தாதிமை இல்லத்தில் குறுகிய காலத்துக்குத் தங்கலாம்.

அவர்கள் வீட்டிலிருந்தே மெய்நிகர் திட்டங்களிலும் கலந்துகொள்ளலாம்.

 ஜூரோங் ஸ்ப்ரிங்கில் (Jurong Spring) அமைந்துள்ள NTUC Health அமைப்பின் புதிய தாதிமை இல்லத்தில் பிடித்த பாடல்களைப் பாடுவதிலிருந்து மிகை மெய்நிகர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதுவரை... பல நடவடிக்கைகள் உள்ளன.

இங்கு அனைவருக்கும் ஏதாவது இருக்கும்.

இங்கு முழுநேரமாக வசிக்கும் 240 குடியிருப்பாளர்கள் தங்களுக்குப் பிடித்த நடவடிக்கையைத் தேர்ந்தெடுக்கலாம்.  

Flexible Care Options என்ற குறுகியகால மூத்தோர் பராமரிப்புத் திட்டங்களில் 3 அம்சங்கள் உள்ளன. 

அதில் Care on Sundays என்ற ஞாயிற்றுக்கிழமைகளில் உதவி வழங்குவது, Dementia என்ற மறதிநோய் உள்ளவர்களுக்கான தனிப்பட்ட கவனிப்பும் உள்ளன.

Day Care Plus என்ற இணையத்தின் வழியாக முதியவர்களுக்குத் தேவையான உடற்பயிற்சியும் அவர்களுக்குத் தேவையான கவனிப்புகளை வழங்கும் 3 திட்டங்கள் இந்த அம்சங்களில் அடங்கும்.

மூப்படையும் மக்கள்தொகையின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்றாற்போல் திட்டங்கள் அமைந்துள்ளன.

மூத்தோருக்கு ஆதரவளிக்கச் சமூகத்தினரிடையே கூடுதல் ஒத்துழைப்புத் தேவை என்று சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் (Ong Ye Kung) கேட்டுக்கொண்டார்.

தாதிமை இல்லங்கள் தொடர்ந்து முக்கியப் பங்கு வகிக்கும் என்று அவர் கூறினார்.

ஆதாரம் : AGENCIES

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்