Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

திறன் மேம்பாடு, புத்தாக்கம் ஆகியவற்றுக்குக் கூடுதல் உதவி : தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ்

வாசிப்புநேரம் -
ஊழியர்கள் தங்களது திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் நிறுவனங்கள் புத்தாக்க முயற்சிகளில் ஈடுபடவும் தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் மேலும் உதவி வழங்குவதாக அதன் தலைமைச் செயலாளர் இங் சீ மெங் (Ng Chee Meng) தெரிவித்தார்.

இளம் பட்டதாரிகள் முதல் நிபுணர்கள் வரை வாழ்க்கைத் தொழிலில் வெவ்வேறு காலக்கட்டத்தில் இருக்கும் ஊழியர்களுக்கு வழிகாட்டிக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.

1,100க்கும் மேற்பட்டோர் அவர்களுக்கு வழிகாட்டுவர்.

ஏற்கனவே செயற்கைத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் செயல்படும் மின்னிலக்க ரீதியான வாழ்க்கைத் தொழில் வழிகாட்டிகள் உள்ளன.

மின்னிலக்கக் கருவிகளைக் கொண்டு வேலைக்கு விண்ணப்பிப்போரின் விவரங்களைச் சரிபார்க்கலாம், திறன்களில் உள்ள இடைவெளிகளையும் அடையாளம் காணலாம்.

பயிற்சித் திட்டங்களையும் பரிந்துரைக்கலாம்.

இதன் வழி வேலைதேடுவோர் புதிய வாய்ப்புகளுக்குத் தயாராகலாம்.

வரும் ஆண்டில் வர்த்தகங்கள் வளர்வதற்கும் ஊழியர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் கூடுதல் நிதி ஆதரவைத் தேசியத் தொழிற்சங்க காங்கிரஸ் கோருகிறது.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்