Skip to main content
$66 மில்லியன் மதிப்பில் அணுச்சக்தி ஆராய்ச்சி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

$66 மில்லியன் மதிப்பில் அணுச்சக்தி ஆராய்ச்சி

வாசிப்புநேரம் -
$66 மில்லியன் மதிப்பில் அணுச்சக்தி ஆராய்ச்சி

CNA

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

அணுச்சக்திப் பாதுகாப்புப் பற்றி ஆராய்ச்சி நடத்த 66 மில்லியன் வெள்ளி மானியம் பெறவிருப்பதாய் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகமும் (NUS) தேசியச் சுற்றுப்புற அமைப்பும் அறிவித்துள்ளன.

ஆய்வு, புத்தாக்கம், தொழில்முனைப்பு 2025 திட்டத்தின்கீழ் இரண்டரை ஆண்டுக்கு ஆய்வு நடத்தப்படும்.

வரவுசெலவுத் திட்ட உரையில் அணுச்சக்தியைப் பயன்படுத்துவது குறித்து ஆராயப்படும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியிருந்தார்.

இன்று சிங்கப்பூர் அணுச்சக்தி ஆய்வு, பாதுகாப்புக் கழகத்தின் (Singapore Nuclear Research and Safety Institute) புதிய கட்டடம் திறக்கப்பட்டது.

எதிர்காலத்தில் 100 நிபுணர்கள் கொண்ட குழு அமைக்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியானது.

திறப்பு விழாவில் தேசிய ஆய்வு நிறுவனத்தின் தலைவர் திரு ஹெங் சுவீ கியெட் (Heng Swee Keat) கலந்துகொண்டு உரையாற்றினார்.

ஆசியான் நாடுகளில் அணுமின் ஆலைகள் இன்னும் செயல்படவில்லை என்றாலும் இந்தோனேசியா, பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகள் அது குறித்து அறிவித்துள்ளதாக முன்னாள் துணைப் பிரதமர் ஹெங் தெரிவித்தார்.

வட்டாரத்தில் உள்ள பிற நாடுகளிடமிருந்து சிங்கப்பூர் வேறுபட்டாலும் அங்கு எடுக்கப்படும் முயற்சிகளுக்குச் சிங்கப்பூரின் கண்டுபிடிப்புகள் வலுச் சேர்க்கும் என்றார் திரு ஹெங்.

அணுச்சக்தி தொழில்நுட்பம் தொடர்ந்து வளர்ச்சியடைவதால் அவற்றை மதிப்பிடும் திறன் சிங்கப்பூருக்கு அவசியம் என்று திரு ஹெங் குறிப்பிட்டார்.

கதிரியக்க அவசரநிலையை எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்