NUH-இல் பிறந்த ஆகச் சிறிய குழந்தை 13 மாதங்களுக்குப் பிறகு நலமுடன் வீடு திரும்பியது
NUH-இல் பிறந்த ஆகச் சிறிய குழந்தை 13 மாதங்களுக்குப் பிறகு நலமுடன் வீடு திரும்பியது
தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையில் பிறந்த ஆகச் சிறிய குழந்தை 13 மாதங்களுக்குப் பிறகு நலமுடன் வீடு திரும்பியுள்ளது.
குவெக் யூ சுவான் (Kwek Yu Xuan) என்ற அந்தப் பெண் குழந்தை 13 மாதங்களாகத் தீவிர சிகிச்சைப் பரிவில் சிகிச்சைப் பெற்று வந்தது.
சுமார் 4 மாதங்கள் முன்கூட்டியே கடந்த ஆண்டு ஜூன் மாதம் 9ஆம் தேதி அந்தக் குழந்தை பிறந்தது.
அப்போது அதன் எடை 212 கிராம், நீளம் 24 செண்டிமீட்டர் மட்டுமே.
தற்போது அந்தக் குழந்தை 6.3 கிலோகிராம் எடையில் உள்ளது.
அது உலகிலேயே ஆகக் குறைவான எடையில் பிறந்து நலமுடன் வீடு திரும்பிய குழந்தை என நம்பப்படுகிறது.
இதற்கு முன்னர் அமெரிக்காவில் ஆகக் குறைவான எடையில் பிறந்து நலமாக வீடு திரும்பிய குழந்தையின் எடை 245 கிராம்.
குவெக்கின் பெற்றோர் சிங்கப்பூர் நிரந்தரவாசிகள். அவர்கள் மலேசியாவைச் சேர்ந்தவர்கள்.
குவெக்கின் சிகிச்சைக்கு சுமார் 200,000 வெள்ளி செலவானது.
Give.asia நன்கொடைப் பக்கம் மூலம் குழந்தைக்காக 366,884 வெள்ளி நிதி திரட்டப்பட்டது.
திரட்டப்பட்ட நிதியில் குழந்தையின் மருத்துவசிகிச்சைக்குத் தேவையானதை மட்டும் வைத்துக்கொண்டு எஞ்சிய நிதியை சிரமத்தில் உள்ள மற்றவர்களுக்குக் கொடுத்து உதவியுள்ளனர் குவெக்கின் பெற்றோர்.