Skip to main content
உலக அங்கீகாரம் பெறும் NUH
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

உலக அங்கீகாரம் பெறும் NUH

வாசிப்புநேரம் -
உலக அங்கீகாரம் பெறும் NUH

கோப்புப்படம்

சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனை உலகிலேயே முதல் அனைத்துலகச் சுகாதாரப் பராமரிப்புக்கான நீடித்த நிலைத்தன்மைச் சான்றிதழைப் பெற்றுள்ளது.

சுகாதாரப் பராமரிப்புத் துறையால் பருவநிலை மாற்றத்தில் பெரும் பாதிப்பு ஏற்படுவதாக நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபு கூறினார்.

மருந்தகங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டைப் பாதிக்குமேல் குறைத்தது..

2030க்குள் மறுபயனீட்டு விகிதத்தை 60 விழுக்காடு அதிகரிக்க உறுதிபூண்டது...

இதுபோன்ற முயற்சிகளால் மருத்துவமனைக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

மயக்கமருந்து சுவாசக் கருவிகளை அன்றாடம் மாற்றுவதற்குப் பதிலாக ஒவ்வொரு வாரமும் மாற்றியதால் சுமார் 5.5 டன் கரிம வெளியேற்றம் குறைந்ததாக மருத்துவமனை சொன்னது.

சுமார் 270,000 பிளாஸ்டிக் போத்தல்களை மிச்சப்படுத்தும் அளவு அது.

கழிவை வகைப்படுத்தும் புதிய முறையால் காகிதத்தை மறுபயனீடு செய்யும் விகிதம் கிட்டத்தட்ட 50 விழுக்காடு கூடியிருக்கிறது.

பிளாஸ்டிக்கை மறுபயனீடு செய்யும் விகிதமும் சுமார் 230 விழுக்காடு கூடியது.

உலகளவில் சுகாதாரப் பராமரிப்புத் துறை 4 விழுக்காட்டு வெப்ப வாயுக்களை வெளியேற்றுவதாகத் திருவாட்டி ஃபு சொன்னார்.

அதிக மின்சாரத்தையும் தண்ணீரையும் பயன்படுத்துவதோடு மிக அதிக அளவு கழிவுக்கும் அந்தத் துறை காரணம் என்றார் அவர்.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்