படிப்பை முடித்த ஆறு மாதத்துக்குள் வேலை கிடைத்த பட்டதாரிகளின் எண்ணிக்கை குறைந்தது
வாசிப்புநேரம் -
(படம்: envato.com)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரில் சென்ற ஆண்டு படிப்பை முடித்து ஆறு மாதத்துக்குள் வேலை கிடைத்த பட்டதாரிகளின் எண்ணிக்கை மேலும் குறைந்ததாகக் கருத்தாய்வு சொல்கிறது.
பட்டதாரிகளின் வேலையில்லா விகிதம் இரண்டரை விழுக்காடு உயர்ந்தது.
உள்ளூர்ப் பல்கலைக்கழகப் பட்டதாரிகளில் சுமார் 87 விழுக்காட்டினருக்கு ஆறு மாதத்துக்குள் வேலை கிடைத்திருக்கிறது.
முந்திய ஆண்டில் 89 விழுக்காட்டினருக்கு ஆறு மாதத்துக்குள் வேலை கிடைத்தது.
உள்ளூர்ப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 12,500 அண்மைப் பட்டதாரிகளிடம் கருத்தாய்வு நடத்தப்பட்டது.
பட்டதாரிகளின் இடைநிலை வருமானம் உயர்ந்திருக்கிறது.
அது 4 விழுக்காட்டுக்கும் மேல் உயர்ந்து, 4,500 வெள்ளியைத் தொட்டது.
கடந்த ஆண்டுப் பட்டதாரிகளில் சுமார் 1,000 பேர் பகுதிநேர வேலைக்குச் சென்றதாகவும் ஆய்வு சொல்கிறது.
சென்ற ஆண்டு உலகப் பொருளாதாரம் நிச்சயமற்று இருந்ததால் வேலைக்கு ஆள் எடுப்பது குறைந்தது என்று மனிதவள அமைச்சின் ஆரம்ப வேலைச் சந்தைத் தரவு கூறியது.

ஆதாரம் : Others