Skip to main content
கழக வீடுகளில் வசிப்போர் எண்ணிக்கை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

கழக வீடுகளில் வசிப்போர் எண்ணிக்கை - கூடியதா குறைந்ததா?

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

2023ஆம் ஆண்டில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் வசிக்கும் சிங்கப்பூரர்கள், சிங்கப்பூர் நிரந்தரவாசிகள் ஆகியோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

2018 -- 3.15 மில்லியன் பேர்
2023 -- 3.18 மில்லியன் பேர்


கழகம் நடத்திய கருத்தாய்வில் அது தெரியவந்தது.

அந்தக் கருத்தாய்வு 5 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.

இதற்கு முன்பு கருத்தாய்வு 2018ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது.

சிங்கப்பூரர்கள், சிங்கப்பூர் நிரந்தரவாசிகள் மத்தியில் கிட்டத்தட்ட பத்தில் 8 பேர் கழக வீடுகளில் வசிக்கின்றனர்.

கழக வீடுகளில் சுமார் 1.1 மில்லியன் குடும்பங்கள் உள்ளன.

பத்தில் 9க்கும் அதிகமான குடும்பங்களுக்கு வீடு சொந்தமாகிவிட்டது.

2023ஆம் ஆண்டில் கழக வீடுகளில் வசிப்போரின் இடைநிலை வயது (median age) 43ஆக இருந்தது.

குடும்பங்களின் அளவு 2018ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது 2023ஆம் ஆண்டில் குறைந்தது.

ஒரு குடும்பத்தில்,

2018 -- 3.1 பேர்
2023/24 - 3.0 பேர்

கழக வீடுகளில் பெரும்பாலானவற்றில் குடும்பங்கள் வசிக்கின்றன.

ஆனால் அந்த விகிதம் சற்றுக் குறைந்துள்ளது.

2018 -- 86.6%
2023/24-- 83.0%

ஒற்றையர்கள் வசிக்கும் வீடுகளின் விகிதம் அதிகரித்துள்ளது.

2018 -- 12.6%
2023/24-- 15.6%

மூப்படையும் சமூகம், மாறிவரும் வீட்டுத் தெரிவுகள் ஆகியவை அந்த மாற்றங்களைச் சித்திரிப்பதாகக் கழகம் குறிப்பிட்டது.

மூத்தோர் வேறு வீடுகளுக்கு மாறாமல் அதே வீட்டிலேயே இருக்க விரும்புகின்றனர்.

சுமார் 85 விழுக்காட்டினர் அதனைத் தெரிவித்தனர்.

ஆனால் மூத்தோரில் சுமார் 14 விழுக்காட்டினர் வீடு மாற விரும்பினர்.

காரணம்?

எளிதாகப் பராமரிக்கச் சிறிய வீடுகள் ஏதுவாக இருக்கும்.

தாங்கள் வசிக்கும் வீட்டை விற்றால் கூடுதல் வருவாய் கிடைக்கும்.

மூவறை வீடுகள் மூத்தோரிடையே பிரபலமான தெரிவாக இருந்துவருவது கருத்தாய்வில் தெரிந்தது.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்