தேவைக்கேற்பத் தாதியர்... புதிய திட்டம் அறிமுகம்
வாசிப்புநேரம் -
படம்: National University Health System
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
தேசியப் பல்கலைக்கழக சுகாதார அமைப்பு (NUHS) தாதியர் பற்றாக்குறையைச் சமாளிக்க மாறுபட்ட வேலை முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
தேவைக்கேற்ப தாதியரைப் பணியில் அமர்த்தும் 'Nurse-on-Demand' திட்டமும் அதில் அடங்கும்.
ஓய்வுபெறும் வயதை எட்டிய அனுபவமிக்க தாதியரைத் தொடர்ந்து பணியில் வைத்திருக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அதன் மூலம் வலுவான தாதியர் அணியை உருவாக்கி அவர்களின் பணி வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்துக்கும் பொருத்தமான வாய்ப்புகளையும் வழங்க முடியும் என்று அமைப்பு தெரிவித்தது.
தாதியர் தொழிலை வலுப்படுத்தும் முயற்சிகள், தேசிய பல்கலைக்கழகச் சுகாதார அமைப்பின் தாதியர் தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டன.
நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் அதிகமான தாதியர் கலந்துகொண்டனர்.

ஆதாரம் : Mediacorp Seithi