Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இன்று தாதியர் தினம்! சிங்கப்பூரில் மட்டும் தாதியர் தினம் ஏன் இன்று அனுசரிக்கப்படுகிறது?

வாசிப்புநேரம் -

இன்று சிங்கப்பூரில் தாதியர் தினம் அனுசரிக்கப்படுகிறது.

உலகெங்கிலும் தாதியர் தினம் மே மாதம் 12ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது.

தாதிமைத் தொழிலில் வரலாற்றில் ஆகப்பெரிய முன்னுதாரணமான தாதி ஃபுளோரன்ஸ் நைட்டிங்கேலின் (Florence Nightingale) பிறந்தநாள் என்பதால் மற்ற நாடுகளில் தாதியர் தினம் அந்நாளன்று அனுசரிக்கப்படுகிறது.

சிங்கப்பூரில் தாதியர் தினம் அனுசரிக்கப்படும் தேதி மாறுபட்டிருப்பதற்குக் காரணம்?

 

  • 1885க்கு முன்பு சிங்கப்பூரில் சுகாதாரப் பராமரிப்பின் தரம் இப்போதுள்ள அளவுக்கு இல்லை. மருத்துவர்களுக்கு ஆதரவாகச் செயல்படப் போதிய தாதியர் அப்போது இல்லை.
  •  1885ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் உள்ளூர் பிரெஞ்சு கான்வெண்ட்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரிகள் பொது மருத்துவமனையில் தாதியராகப் பணிபுரிய முன்வந்தனர்.
  •  அதன்மூலம் 1885ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து தாதிமைத் துறை மேம்படத் தொடங்கியது.
  •  அந்த மைல்கல்லை அனுசரிக்கவே சிங்கப்பூரில் தாதியர் தினம் ஆகஸ்ட் மாதத்தில் அனுசரிக்கப்படுகிறது.


சிங்கப்பூரில் அண்மை கோவிட் கிருமிப்பரவல் சூழலில் தாதியரின் சேவைகள் தொடர்ந்ததால், நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருந்தது.

கிருமிப்பரவல் சூழலில் தாதியர் பலரும் அவர்களது குடும்பத்துடன் நேரம் செலவழிக்க முடியாத நிலையில் இருந்தனர். அவர்களுக்கு நோய் தொற்றும் அபாயம் அதிகம் இருந்தது.

இருப்பினும் அவர்கள் தொடர்ந்து மருத்துவமனைகளில் அயராது உழைத்து மக்களைக் கிருமித்தொற்றிலிருந்து குணப்படுத்த உதவினர்.

கிருமிப்பரவல் சூழலில் மட்டுமல்லாமல் எந்நேரமும் பிறருக்கு முழுமனத்துடன் சேவையாற்றி உதவிபுரியும் தாதியரின் சேவையை என்றென்றும் போற்றுவோம்.

தாதியர் அனைவருக்கும் 'செய்தி'யின் தாதியர் தின வாழ்த்துகள்!

(ஆதாரம்: Singapore Infopedia, National Library Board)

தாதியருக்காக சிங்கப்பூர் தனி நாளை அனுசரிப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தனர் தாதியர்.

இது ஒரு பெரிய அங்கீகாரம் என்றார் Ng Teng Fong பொது மருத்துவமனையின் மூத்த தாதி திரிபுரசுந்தரி.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்