Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தாதியரின் சேவை பற்றி நோயாளிகள் வழங்கும் கருத்து அவர்களின் வேலைத்தரத்தை நேரடியாக நிர்ணயிக்காது

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் தாதியரின் சேவைகுறித்து நோயாளிகளும் அவர்களது குடும்பத்தினரும் வழங்கும் கருத்துகள் தாதியரின் வேலைத்தர மதிப்பீட்டை நேரடியாக நிர்ணயிக்கப் பயன்படுத்தப்பட மாட்டாது என்று சுகாதாரப் பிரிவின் நாடாளுமன்ற மூத்த செயலாளர் ரஹாயு மாஸாம் தெரிவித்துள்ளார். 

எனினும் தாதியரின் குறைகளைச் சுட்டிக்காட்டும் கருத்துகள் அவர்களது வேலைத்தரத்துக்கான மதிப்பீட்டை ஓரளவுக்குப் பாதிக்கக்கூடும் என்று அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் அதுகுறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்குத் திருவாட்டி ரஹாயு பதிலளித்தார். 

தாதியரின் வேலைத்தரத்தை மதிப்பீடு செய்வதற்குச் சில அம்சங்கள் கருத்தில் கொள்ளப்படுகின்றன என்று அவர் குறிப்பிட்டார்:

-- நேரத்துடனும் தரமான வழியிலும் நோயாளிகளைக் கவனிப்பது
-- தலைமைத்துவப் பொறுப்புகளைக் கையாள்வது
-- வேலைசார்ந்த அல்லது தனிப்பட்ட விதத்தில் மேம்படுவது

தாதியரின் வேலைத்தர மதிப்பீட்டின் ஓர் அம்சமான தரமான சேவையின்கீழ், நோயாளிகள் அல்லது அவர்களது குடும்பத்தினர் வழங்கும் கருத்துகள் சேர்க்கப்படுகின்றன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்