"தவறுகள் நிறைந்த பாரபட்சமான கட்டுரை" - எழுதியதற்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்ட NUS பேராசிரியர்
வாசிப்புநேரம் -

East Asia Forum இணையத் தளத்திற்காகக் கட்டுரை எழுதியிருந்த டாக்டர் சான் யிங்-கிட் (Chan Ying-Kit) அது ஏற்படுத்திய சர்ச்சைக்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளார்.
சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தில் துணை பேராசிரியராகப் பணிபுரியும் அவர் "A spate of scandals strikes Singapore" எனும் கட்டுரையை எழுதியிருந்தார்.
அந்தக் கட்டுரை இணையப் பக்கத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டதாக அவர் Today-யிடம் கூறினார்.
அந்தக் கட்டுரைக்கு POFMA திருத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
திருத்த உத்தரவுக்கு இணங்கத் தவறியதால் அது தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
கட்டுரையில் இடம்பெற்றிருந்த தவறுகளுக்கும் பொய்த் தகவல்களுக்கும் டாக்டர் சான் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
பல்கலையின் ஈடுபாடு இன்றி தாமாகவே கட்டுரையை எழுதியதாக அவர் குறிப்பிட்டார்.
East Asia Forum தளத்தைச் சிலரால் இன்னும் பயன்படுத்த முடிகிறது.
ஒரு சிலருக்கு அது தடை செய்யப்பட்டுள்ளதாகக் காட்டுகிறது.
அது குறித்து Today தொடர்பு, தகவல் அமைச்சை அணுகியுள்ளது.

ஆதாரம் : Today