Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கடித்துக் கட்டுப்படுத்தலாம் இந்த மின்னணுச் சாதனத்தைக் கொண்டு...

வாசிப்புநேரம் -

மலிவானது, எடை குறைவானது, பயன்படுத்த எளிதானது கூடவே கடிப்பதை உணரக்கூடிய  ஆற்றல் கொண்டது....

இந்த அற்புதமான சாதனத்தின் பெயர் Interactive mouthguard.

இத்தகைய சாதனத்தை முதன்முறையாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் (NUS)  அறிவியல் வேதியியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் லியு சியாவோங் (Liu Xiaogang) தலைமையிலான ஆய்வுக் குழு உருவாக்கியிருக்கிறது. அது சிங்குவா (Tsinghua)பல்கலைக்கழகத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. 

சாதனத்தின் வாயிலாகக் கணினி, திறன்பேசி, சக்கர நாற்காலி ஆகியவற்றைத் துல்லியமாகக் கட்டுப்படுத்த முடியும். 

கை செயல்பாடு குறைவாக உள்ளவர்களுக்கு இது பேருதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது.

இந்தச் சாதனத்தை மருத்துவ உதவிக்காகவும் தோல், பல் நோய்களைக் கண்டறிய உதவும் திறன்மிக்க சுகாதாரச் சாதனமாகவும் பயன்படுத்தலாம். 

நடப்பில் உள்ள உதவித் தொழில்நுட்பங்களுடன் ஒப்பிடுகையில் 7 கிராம் எடைகொண்ட இந்தச் சாதனைத்தைப் பயன்படுத்த அதிகப் பயிற்சி தேவையில்லை. 

ஒரு சாதனத்தை உருவாக்க தற்போது 100 வெள்ளி தேவைப்படுகிறது. பெரிய அளவிலான தயாரிப்புகளை மேற்கொள்ளும்போது செலவைக் குறைக்க முடியும் என ஆராய்ச்சியாளர் குழு நம்புகிறது. 

தற்போது தயாரிக்கப்பட்டுள்ள சாதனம் சீரான பற்கள் உடையவர்களுக்குத்தான் என்றாலும் வெவ்வேறு பல் வடிவங்களைக் கொண்ட பயனீட்டாளர்கள் அல்லது செயற்கைப் பற்கள் அணிபவர்களுக்கு ஏற்றவாறும் அது உருவாக்கப்படலாம் எனக் குழு தெரிவித்தது. 

ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்