Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் போன்ற துறைகளில் ஆராய்ச்சி செய்ய , NUS கணினியியல் பள்ளிக்கு 50 மில்லியன் வெள்ளி நன்கொடை வழங்கிய Sea Limited நிறுவனம்

சிங்கப்பூர் தேசியப் பல்கலைகழகம்,இதுவரை இல்லாத அளவில் ஆக அதிகமான நிறுவன நன்கொடையை Sea Limited நிறுவனத்திடமிருந்து பெற்றுள்ளது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர் தேசியப் பல்கலைகழகம்,இதுவரை இல்லாத அளவில் ஆக அதிகமான நிறுவன நன்கொடையை Sea Limited நிறுவனத்திடமிருந்து பெற்றுள்ளது.

மின்வணிகத் தளமான Shopeeஇன் உரிமையாளரான Sea Limited, 50 மில்லியன் வெள்ளியைப் பல்கலைக்கழகத்தின் கணினியியல் பள்ளிக்கு வழங்கியுள்ளது.

செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் போன்ற துறைகளில் ஆராய்ச்சி செய்ய தேவையான நிதியையும் உபகாரச் சம்பளங்களையும் வழங்க நன்கொடை உதவும்.

மேலும், மாணவத் தொழில்முனைப்புத்
திட்டங்கள், மக்களைச் சென்றடையும் முயற்சிகள் ஆகியவற்றுக்கு ஆரம்ப நிதியுதவி வழங்கவும் நன்கொடை கைகொடுக்கும்.

அதற்கான கையெழுத்திடும் நிகழ்ச்சியில், கல்வியமைச்சர் லாரன்ஸ் வோங் (Lawrence Wong) பேசினார்.

மின்னியல் துறைக்கு மாறுவதைக் கிருமிப்பரவல் சூழல் விரைவுபடுத்தி வருகிறது.

இந்நிலையில், தொழில்துறைக்கும் கல்வித்துறைக்கும் இடையிலான பங்காளித்துவம் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது என்று அவர் வலியுறுத்தினார்.

பத்தாண்டுக்கு முன் ஒப்பிடுகையில் ​​பெற்றோர், மாணவர்கள் இடையே coding போன்ற பாடங்களில் அதிக ஆர்வம் உள்ளதையும் திரு. வோங் சுட்டினார்.

எனவே, மக்களின் ஆர்வத்தைப் பூர்த்திசெய்ய உயர்கல்வி நிலையில் தகவல் தொடர்புத் தொழில்நுட்ப வகுப்புகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று அவர் கூறினார்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்