படிக்கலாம்... விளையாடலாம்... புதிய பல்கலை விடுதியில்
(படம்: Valour House website)
This audio is generated by an AI tool.
சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகம் விளையாட்டு சார்ந்த புதிய விடுதியைத் திறந்திருக்கிறது.
Valour House எனும் அந்த விடுதியில் மாணவ விளையாட்டாளர்களும் விளையாட்டு ஆர்வலர்களும் தங்கலாம்.
விடுதியில் 600 மாணவர்கள் வரை தங்கலாம்.
நிபுணத்துவ விளையாட்டு வசதிகளுடன் கூடிய இடங்களுக்கு அருகில் விடுதி இருப்பதால் தேசிய விளையாட்டாளர்களுக்கு இன்னும் நல்ல ஆதரவை வழங்கமுடியும் என்று பல்கலை கூறியது.
பயிற்சியிலிருந்து விரைவாகத் தேறிவர விடுதியில் ஓய்வறை இருக்கும்.
Sports for Life எனும் விருப்பப் பாடமும் வழங்கப்படும்.
சிறந்த விளையாட்டு உணர்வு, நற்பண்பு வளர்ச்சி உள்ளிட்ட பாடங்கள் அதில் அடங்கும்.
புதிய விடுதி மாணவர்களிடையே மீள்திறனையும் ஒழுக்கத்தையும் தரும் என்று நம்புவதாகப் பல்கலை கூறியது.