Skip to main content
கம்போடிய கிராமவாசிகளுக்கு உதவிய NUS மாணவர்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

கம்போடிய கிராமவாசிகளுக்கு உதவிய NUS மாணவர்கள்

வாசிப்புநேரம் -
கம்போடிய கிராமவாசிகளுக்கு உதவிய NUS மாணவர்கள்

(படம்: TODAY)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் யோங் லூ லின் மருத்துவப் பள்ளி மாணவர்களும் WS Audiology நிறுவனமும் சேர்ந்து கம்போடிய கிராமவாசிகளுக்கு உதவியிருக்கின்றனர்.

கம்போடியாவின் பொய்ப்பெட் (Poipet) கிராமத்தைச் சேர்ந்த 600க்கும் அதிகமானோருக்குக் காது கேட்கும் திறனைச் சோதிக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

சுமார் 10 விழுக்காட்டினருக்குக் குறைபாடு இருந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்களுள் 85 விழுக்காட்டினருக்கும் மேற்பட்டோருக்குச் செவிப்புலன் உதவிச் சாதனங்கள் பொருத்தப்பட்டன. அதனால் பல ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களுக்குத் தெளிவாகக் காது கேட்க முடிந்தது.

கிராமவாசிகளுக்கு முக்கிய மருத்துவப் பரிசோதனைகளும் நடத்தப்பட்டன.

யோங் லூ லின் மருத்துவப் பள்ளி 2010ஆம் ஆண்டு முதல் Project Battambang திட்டத்தை நடத்தி வருகிறது.

அந்தத் திட்டத்தில் இணைந்துள்ள WS Audiology 250 செவிப்புலன் துணைச் சாதனங்களை நன்கொடையாக வழங்கியது.

Project Battambang திட்டத்தில் பங்கெடுத்த NUS மாணவர்கள் சென்ற ஆண்டு (2024) டிசம்பர் மாதம் கம்போடியாவுக்குச் சென்றிருந்தனர்.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்