உலக வரிசையில் NUS
CNA
சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகம், உலகப் பல்கலைக்கழகத் தரநிலைப் பட்டியலில் 8ஆவது இடத்தைத் தக்கவைத்துள்ளது.
QS உலகப் பல்கலைக்கழகங்களின் பட்டியலில் முதல் 10 இடங்களில் இடம்பிடித்த ஒரே ஆசியப் பல்கலைக்கழகமாகவும் அது திகழ்கிறது.
சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகமும் சுவிட்சர்லந்தின் ETH ZuriK பல்கலைக்கழகமும் மட்டுமே வெளியே உள்ளவை, முதல் 10 இடங்களில் வந்துள்ள மற்ற எல்லாப் பல்கலைக்கழகங்களும் அமெரிக்கா, பிரிட்டனைச் சேர்ந்தவை.
தொடர்ந்து 13 ஆண்டாக மெசச்சூசட்ஸ் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (Massachusetts Institute of Technology- MIT) முதலிடம் வகிக்கிறது.
உலகத் தரவரிசையில், சிங்கப்பூரின் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் 11 இடங்கள் முன்னேறி இம்முறை 15ஆவது இடத்தைப் பிடித்தது.