Nvidia விவகாரம் - நுண்சில்லுகளின் மதிப்பு சுமார் $520 மில்லியன்
வாசிப்புநேரம் -
Reuters/Mike Blake
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
Nvidia நுண்சில்லுகள் தென்கிழக்காசியாவில் சட்டவிரோதமாக விநியோகிக்கப்பட்ட மோசடியில், மொத்த நுண்சில்லுகளின் மதிப்பு சுமார் 520 மில்லியன் வெள்ளி என்று தெரியவந்துள்ளது.
அதில் சம்பந்தப்பட்ட இரு சிங்கப்பூர் ஆடவர்களுக்கும் சீன ஆடவர் ஒருவருக்கும், 600,000 வெள்ளி முதல் 1 மில்லியன் வெள்ளி வரையிலான தொகை கொடுத்தால் பிணையில் விடுவிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூரைச் சேர்ந்த ஆரன் வூன் குவோ ஜியேவும் (Aaron Woon Guo Jie) ஏலன் வேய் ஸாவ்லுனும் (Alan Wei Zhaolun) 250 மில்லியன் டாலர் அளவில் மோசடி செய்ததாகக் கூறப்பட்டது.
Dell, Super Micro நிறுவனங்களை அவர்கள் ஏமாற்றியதாக நம்பப்படுகிறது.
சீனாவைச் சேர்ந்த 51 வயது லி மிங் (Li Ming), Super Micro நிறுவனத்தை ஏமாற்றியதாகவும், அனுமதியின்றி வங்கிக் கணக்கு ஒன்றைப் பயன்படுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.
சென்ற மாதம் காவல்துறை, சுங்கத்துறை ஆகியவை நடத்திய அதிரடி நடவடிக்கையில் பிடிபட்ட 9 பேரில் அந்த மூவரும் அடங்குவர்.
அமெரிக்க ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை மீறி, சட்டவிரோத முறையில் சீனாவுக்கு Nvidia நுண்சில்லுகளை அவர்கள் அனுப்பியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

ஆதாரம் : CNA