Skip to main content
GCE O
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

GCE O-Level முடிவுகள் - ஜனவரி 10

வாசிப்புநேரம் -
GCE O-Level முடிவுகள் - ஜனவரி 10

(படம்: கீர்த்திகா பெருமாள்)

பொதுக் கல்விச் சான்றிதழ் சாதாரண நிலைத் (O-Level) தேர்வு முடிவுகள் வரும் 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என்று கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

பிற்பகல் 2.30 மணிக்கு மாணவர்கள் அவர்களின் பள்ளிகளுக்குச் சென்று முடிவுகளை நேரடியாகப் பெறலாம்.

அதற்கான ஏற்பாடுகள் பற்றிப் பள்ளிகள் தெரிவிக்கும்.

தேர்வு முடிவுகளைப் பெற நேரடியாகச் செல்ல முடியாத மாணவர்கள் பிரதிநிதியை அனுப்பலாம்.

பிரதிநிதிகள் உரிய ஆவணங்களுடன் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று அமைச்சு சொன்னது.

தனியார் மாணவர்கள் SEAB இணையவாசலில் தேர்வு முடிவைத் தெரிந்து கொள்ளலாம்.

அவர்கள் Singpass-யைப் பயன்படுத்தி முடிவுகளைப் பார்க்கமுடியும்.

ஜனவரி 10ஆம் தேதி பிற்பகல் 3.15 மணி முதல் ஜனவரி 24ஆம் தேதி இரவு 11 மணி வரை அவர்கள் முடிவுகளைப் பார்க்கலாம்.

தேர்வு முடிவுகளுக்கு ஏற்ப மாணவர்கள் தொடக்கக் கல்லூரி, Millennia கல்வி நிலையம், பலதுறைத் தொழிற்கல்லூரி, தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆகியவற்றில் மேற்படிப்பைத் தொடரலாம்.

வரும் 15ஆம் தேதி வரை மாணவர்கள் அதற்கு விண்ணப்பிக்கலாம்.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்