Skip to main content
Oatsக்குப் பதிலாகக் கள்ளச் சிகரெட்டுகள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

Oatsக்குப் பதிலாகக் கள்ளச் சிகரெட்டுகள்

வாசிப்புநேரம் -
துவாஸ் சோதனைச்சாவடியில் 4,900 அதிகமான பெட்டிகளில் தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகளைக் கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

லாரியைச் சோதனை செய்தபோது Oatsக்குப் பதிலாகக் கள்ளச் சிகரெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் தொடர்பில் 45 வயது மலேசிய ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சென்ற வியாழக்கிழமை (9 அக்டோபர்) நடந்த சம்பவம் குறித்துக் குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையம் இன்று Facebookஇல் பதிவிட்டிருக்கிறது.

மேல் விவாரணைக்காக அந்தச் சம்பவம் சிங்கப்பூர்ச் சுங்கத்துறையின் கவனத்துக்குச் சென்றது.

சிங்கப்பூர் எல்லைகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பதில் ஆணையம் கடப்பாடு கொண்டிருப்பதாகக் கூறியிருக்கிறது.

விசாரணை தொடர்கிறது.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்