Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

OCBC வங்கி தொடர்பிலான மோசடி - பாதிக்கப்பட்டோருக்கு நல்லெண்ண அடிப்படையில் முழுத்தொகை கொடுக்கப்படும்

வாசிப்புநேரம் -
OCBC வங்கி தொடர்பிலான மோசடி - பாதிக்கப்பட்டோருக்கு  நல்லெண்ண அடிப்படையில் முழுத்தொகை கொடுக்கப்படும்

(படம்: TODAY/Aaron Low)

OCBC வங்கி தொடர்பிலான மோசடிக்கு ஆளானோருக்கு  நல்லெண்ண அடிப்படையில் முழுத்தொகை கொடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அனைவருக்கும் அடுத்த வாரத்துக்குள் முழுத்தொகை வழங்கப்படும் என்று வங்கி சொன்னது.

இதுவரை 100க்கும் அதிகமானோருக்குத் தொகை அளிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரையும் உறுதிசெய்வதற்குச் சிறிது காலம் எடுக்கும் என்ற நிலையில், அனைவரையும் பொறுமை காக்கும்படி வங்கி கேட்டுக்கொண்டது.

சிரமமான சூழலில், வாடிக்கையாளர்களுடனான சிக்கல்களைத் தீர்ப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டதைவிடக் கூடுதல் நேரம் எடுத்துவருவதற்கு அது மன்னிப்புக் கேட்டது.

இந்நிலையில், மோசடி குறித்து வாடிக்கையாளர்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்க முயற்சி எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

அது 200க்கும் மேற்பட்டவர்கள் மோசடிக்கு ஆளாவதைத் தவிர்க்க உதவியதாக வங்கி அதிகாரிகள் கூறினர்.

கடந்த டிசம்பர் மாதம் குறுந்தகவல் மூலம் நடத்தப்பட்ட வங்கி மோசடியில் சுமார் 470 பேர் பாதிக்கப்பட்டனர்.

குறைந்தது 8.5 மில்லியன் வெள்ளி ஏமாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆதாரம் : CNA/vl(gs)

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa