Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

தடை செய்யப்பட்ட பொருள்களைச் சாங்கி சிறைக்குள் எடுத்துச்சென்றதை ஒப்புக்கொண்ட அதிகாரி

வாசிப்புநேரம் -
தடை செய்யப்பட்ட பொருள்களைச் சாங்கி சிறைக்குள் எடுத்துச்சென்றதை ஒப்புக்கொண்ட அதிகாரி

CNA/Jeremy Long

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

தடை செய்யப்பட்ட பொருள்களைச் சாங்கி சிறைக்குள் எடுத்துச்சென்றதைச் சிறை அதிகாரி ஒருவர் ஒப்புக்கொண்டிருக்கிறார். 

39 வயது முகமது அஸ்ரி அப்துல் ரஹீம் (Mohammad Asri Abd Rahim) போதைப்பொருள்களையும் ஆபாச நிழற்படங்களையும் கள்ளத்தனமாகக் கொண்டுசென்று சிறைவாசிகளிடம் கொடுத்தார்.

தடை செய்யப்பட்ட பொருள்கள் பிடிபடாமல் இருக்க ரஹீம் பல உத்திகளைக் கையாண்டதாகச் சொல்லப்பட்டது.

அப்படிப் பொருள்களைத் தெரியாமல் கொடுத்ததற்கு ஆகஸ்ட் 2021 முதல் ஜூன் 2022 வரை 3,700 வெள்ளியை அவர் பெற்றார். 

பணத்தைக் கொடுத்த முகமது யூசோப் காசிம் (Mohamad Yusof Kasim), அதற்குத் துணை புரிந்த முரளி விக்னேஷ்வரன் ஆகிய இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

கையூட்டு வாங்கியது அல்லது கொடுத்தது நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 5 ஆண்டுச் சிறைத்தண்டனை, 100,000 வெள்ளி அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

மூவருக்கும் அக்டோபர் 9ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும்.

ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்