Skip to main content
வேலைக்கு அனுப்பப்படும்போது நடக்கும் சாலை விபத்துகள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

வேலைக்கு அனுப்பப்படும்போது நடக்கும் சாலை விபத்துகள் - ஊழியர்களுக்கு இழப்பீடு கிடைக்குமா?

வாசிப்புநேரம் -
வேலைக்கு அனுப்பப்படும்போது  நடக்கும் சாலை விபத்துகள் - ஊழியர்களுக்கு இழப்பீடு கிடைக்குமா?

envato elements

ஊழியர்கள் வேலைக்கு அனுப்பப்படும் போது ஏற்படும் சாலை விபத்துகள் வேலையிடக் காயங்கள் பற்றிய புள்ளிவிவரத்தில் சேர்க்கப்படுவதில்லை.

ஒரு வேலையிடத்திலிருந்து இன்னொரு வேலையிடத்துக்கு அனுப்பப்படும் போது நிகழும் விபத்தும் சேர்க்கப்படுவதில்லை.

மனிதவள அமைச்சர் டான் சீ லெங் இதனைத் தெரிவித்தார்.

ஊழியர்கள் அப்போது வேலையிடத்தில் இல்லாதது அதற்குக் காரணம் என்றார் அவர்.

எனினும் விபத்துக் குறித்து முதலாளிகள் மனிதவள அமைச்சிடம் தெரிவிக்கவேண்டும்; அதன்வழி இழப்பீட்டுக்கு இயல்பாகக் கோரிக்கை பதிவு செய்யப்படும் என்று டாக்டர் டான் குறிப்பிட்டார்.

ஊழியர்களின் நலனைப் பாதுகாப்பது அதன் நோக்கம்.

அமைச்சர் நாடாளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் கென்னத் தியோங் எழுப்பிய கேள்விக்கு டாக்டர் டான் பதிலளித்தார்.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்