Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர் exclusive

"அனைத்துலக அங்கீகாரம் கிடைத்தாலும் பிரதான விழாவில் நியமனம் பெற்றதில் மகிழ்ச்சி" - சிறந்த நாடகத் தொடர் விருது நியமனங்களைப் பெற்ற இயக்குநர்கள்

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

மீடியாகார்ப் பிரதான விழா விருது நிகழ்ச்சி 20ஆம் முறையாக வரும் சனிக்கிழமை (15 பிப்ரவரி) நடைபெறுகிறது.

சிங்கப்பூர் இந்திய ஊடகத்துறையில் சிறந்து விளங்குவோருக்கு நிகழ்ச்சியில் விருதுகள் வழங்கப்படுகின்றன.

அந்தப் பிரிவுகளில் ஒன்று 'சிறந்த நாடகத் தொடர்'.

மொத்தம் 5 நாடகங்கள் அந்தப் பிரிவில் நியமனம் செய்யப்பட்டுள்ளன.

'ஐயா வீடு', 'Oh Butterfly' ஆகியவை அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

பிரதான விழாவில் நியமனம் பெற்ற ஒவ்வொரு நாடகத் தொடரும் தனித்துவமானது என்று மீடியாகார்ப்பின் பேச்சாளர் குறிப்பிட்டார்.

கற்பனை உலகையும் காதலையும் இணைத்துப் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் நாடகத் தொடராக 'Oh Butterfly' திகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

பழங்காலத்து சிங்கப்பூர் கதை.. மரபுடைமை, பாரம்பரியம் ஆகியவற்றை சித்திரிக்கும் வகையில் 'ஐயா வீடு' அமைந்ததாக மீடியாகார்ப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

"அனைத்துலக அங்கீகாரம் கிடைத்திருந்தாலும் உள்ளூர் விருதுக்கு நியமனம் பெறுவதில் மகிழ்ச்சி"

Storybots Asia நிறுவனம் தயாரித்த "Oh Butterfly" சென்ற ஆண்டு இந்தியாவின் எடிசன் (Edison) விருதைத் தட்டிச் சென்றது.

ஜக்கர்த்தாவில் நடைபெற்ற 29ஆவது ஆசிய தொலைக்காட்சி விருது நிகழ்ச்சியில் TANTRA நிறுவனம் தயாரித்த 'ஐயா வீடு' விருது வென்றது.

அனைத்துலக அளவில் சிங்கப்பூர் நாடகம் கௌரவிக்கப்பட்டாலும் பிரதான விழாவில் நியமனம் கிடைப்பது மிக முக்கியமாகக் கருதுவதாய் "Oh Butterfly" நாடகத் தொடரின் இயக்குநர் திரு குமரன் சுந்தரம் (Kumaran Sundaram) கூறினார்.

பிரதான விழாவில் மற்ற சிங்கப்பூர் நாடகத் தொடர்களுடன் நியமனம் பெற்றதில் மகிழ்ச்சி என்று 'ஐயா வீடு' நாடகத் தொடரின் இயக்குநரும், தயாரிப்பாளருமான JK சரவணா தெரிவித்தார்.

சவால்கள் இல்லாத தயாரிப்பா?

'Oh Butterfly' நாடகத்தைத் தயாரிக்கும்போது சில சவால்களைச் சந்தித்ததாகத் திரு குமரன் குறிப்பிட்டார்.

அதனால் திட்டமிட்டதைவிட நாடகத் தொடரின் தயாரிப்புத் தாமதமானதாக அவர் சொன்னார்.

'ஐயா வீடு' 1920கள் 1990களில் ஒரே நேரத்தில் நடைபெறும் கதையை அடிப்படையாகக் கொண்டது.

அதனால் அதற்கென சிறப்பு அரங்க வடிவமைப்பு, ஆடைகள், தனித்துவமான பேச்சு, நடிகர்களுக்குச் சிறப்புப் பயிற்சி ஆகியவற்றை உறுதிசெய்ய வேண்டியிருந்தது.

அதற்குப் பலரின் ஒத்துழைப்புத் தேவைப்பட்டிருந்தாலும் சிங்கப்பூரின் தமிழ் தயாரிப்பு வரலாற்றில் 'ஐயா வீடு' முக்கிய இடம் பிடிக்கும் என்று தாம் நம்புவதாகத் திரு JK சரவணா கூறினார்.

நாடகத் தொடர்களின் வெற்றிக்கு அடுத்து இன்னும் அது போன்ற நாடகத் தொடர்களைத் தயாரிக்க எண்ணுவதாக இயக்குநர்கள் பகிர்ந்துகொண்டனர்.

மேலும் செய்திகள் கட்டுரைகள்