அன்றும் இன்றும்: சிங்கப்பூர் தேசிய ஆவணக் காப்பகத்தின் இடமாற்றம்
சிங்கப்பூர் தேசிய ஆவணக் காப்பகம் 1983-இல் ஓல்டு ஹில் ஸ்ட்ரீட் காவல் நிலையத்திற்கு இடம் மாற்றப்பட்டது.

படம்: NAS
(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)
சிங்கப்பூர் தேசிய ஆவணக் காப்பகம் 1983-இல் ஓல்டு ஹில் ஸ்ட்ரீட் காவல் நிலையத்திற்கு இடம் மாற்றப்பட்டது.
அங்குதான் முதல் முறையாக ஒரு தேசியக் காப்பகத்திற்குத் தேவையான அனைத்து வசதிகளும் இருந்தன.
அங்குள்ள அனைத்துலகப் பயிற்சி வாய்ப்புகளைப் பயன்படுத்தித் தாங்கள் வளர்ச்சியடைந்ததாகத் தேசிய ஆவணக் காப்பகத்தில் மூத்த காப்பாளராகப் பணிபுரியும் திரு குவெக்-சியூ கிம் கெக்.
உங்களுக்குத் தெரியுமா?
1934-இல் கட்டப்பட்ட ஓல்டு ஹில் ஸ்ட்ரீட் காவல் நிலையம் முன்பு சிங்கப்பூரிலேயே ஆகப் பெரிய அரசாங்கக் கட்டடமாகத் திகழ்ந்தது.
1980-களில் தேசிய ஆவணக் காப்பகம், வாய்மொழி வரலாற்றுப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு அரசாங்கப் பிரிவுகளின் அலுவலகங்கள் அங்குதான் அமைந்திருந்தன.
இப்பொழுது தொடர்பு, தகவல் அமைச்சு, கலாசார, சமூக இளையர் துறை அமைச்சு ஆகியவை அங்கு செயல்படுகின்றன.