ElderShield பற்றிய பொய்த்தகவல் அடங்கிய பழைய பதிவு - விளக்கம் அளித்த சுகாதார அமைச்சு
வாசிப்புநேரம் -

(படம்: Calvin Oh))
ElderShield பற்றிய பொய்த்தகவல் அடங்கிய பழைய பதிவு ஒன்று இணையத்தில் பரவுவது குறித்து சுகாதார அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.
முதன்முதலில் 2018இல் பகிரப்பட்ட அந்தப் பதிவில் இருந்த பொய்த் தகவல்களுக்கு அமைச்சு ஏற்கனவே பதிலளித்திருந்தது.
மீண்டும் அந்தச் செய்தி பரவி வருவதாகச் சுகாதார அமைச்சு அதன் Facebook பக்கத்தில் குறிப்பிட்டது.
Eldershieldஇன் வழங்குதொகையைப் பெற ஒருவர் கிட்டத்தட்ட நடமாட முடியாமல் இருக்கவேண்டும் அல்லது மரணத்தின் விளிம்பில் இருக்கவேண்டும் என்று பொய்த் தகவல் கொண்ட பதிவில் எழுதப்பட்டிருந்தது.
அது தவறு. 6 அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளில் 3 அல்லது அதற்கும் மேலானவற்றைச் செய்ய முடியாவிட்டால் வழங்குதொகைக்குத் தகுதிபெறலாம் என்று அமைச்சு நினைவூட்டியது.
அத்துடன் காப்புறுதித் திட்டம் வைத்திருப்போர் 30 ஆண்டுகளுக்குச் சந்தா தொகை செலுத்தினால் மட்டுமே உதவித் திட்டங்களுக்குத் தகுதிபெறலாம் என்று கூறப்பட்டது பொய். அவர்களுக்குக் கடுமையான உடல்குறை இருந்தால் எப்போது வேண்டுமானாலும் வழங்குதொகையைப் பெற விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சு வலியுறுத்தியது.
கடுமையான உடல்குறை இருக்கும்போது அவர்கள் சந்தா செலுத்தவேண்டிய அவசியமில்லை.

ஆதாரம் : Others