Skip to main content
தலைமுறை இடைவெளியா? நாங்கள் உணர்ந்ததே இல்லை!
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர் exclusive

தலைமுறை இடைவெளியா? நாங்கள் உணர்ந்ததே இல்லை! - ஒலிப் படைப்பாளர்கள் ரஃபி, ரவி

வாசிப்புநேரம் -

வேலையிடம் என்றாலே வேலை செய்வோர் இடையே வயதும் அனுபவமும் வேறுபட்டிருக்கும். 

இதனால்  சக ஊழியர்களிடையே தலைமுறை  இடைவெளி உருவெடுக்க வாய்ப்பும் ஏற்படலாம். 

அதைச் சமாளிப்பது எப்படி? 

பலரும் நன்கறிந்த ஒலி 96.8 படைப்பாளர்கள் ரஃபி, ரவி.....

வேலையிடத்தில் தலைமுறை இடைவெளியால் ஏற்படும் சிக்கல்கள்?
அதை அவர்கள் எவ்வாறு சமாளிக்கின்றனர்? 

அவர்களிடம் பேசித் தெரிந்துகொண்டது 'செய்தி' 

rr2

வயது மூத்தவர்களுடன் வேலை செய்யும்போது அவர்களுடைய அனுபவத்தில் இருந்து என்ன கற்றுக் கொள்ளலாம் என்ற மனப்போக்கு இருக்க வேண்டும் என்கிறார் இளம் படைப்பாளர் ரவி. 

“ரஃபி போன்ற மூத்தப் படைப்பாளருடன் இணைந்து பணியாற்றும் போது தலைமுறை இடைவெளியை உணர்ந்ததே இல்லை.
பல்வேறு தகவல் தொடர்புச் சாதனங்கள் குறித்த திறனை இருவரும் சேர்ந்தே கற்றுக் கொள்வோம்," 

rr3

ரவியின் கருத்தை ஆதரித்தார் ரஃபி. 

"விட்டுக் கொடுத்தால் கெட்டுப் போகாது," என்பதை வலியுறுத்திப் பேசினார் அவர்.

வயது வித்தியாசம் இருந்தாலும், இரு தலைமுறையினருக்கு இடையே  நல்ல புரிதலும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் தேவை. 

மின்னிலக்கத் திறன்களைக் கற்றுக்கொள்வதில் தமக்கு இருந்த சிரமங்களைப் பகிர்ந்து கொண்டார் ரஃபி. 

"காணொளி தயாரிப்பது எனக்கு மிகவும் புதிது. ரசிகர்களின் இக்கால எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்ய என்னை நானே நிறைய மாற்றிக்கொண்டதும் உண்டு. இவற்றுக்கு ரவி எனக்கு நிறைய உதவியிருக்கிறார்."

இருப்பினும் ஆடல் போன்ற அம்சங்களில் தலைமுறை இடைவெளி இருக்கவே செய்யும். 

சில சமயங்களில், ஆடல் தேவைப்படும் காணொளிகளில் அதைச் சமாளிக்கும் வழிகளை அறிந்து வைத்திருப்பதாக ரஃபி பகிர்ந்துகொண்டார். அதற்கு ரவியின் ஒத்துழைப்பு உதவுவதாகச் சொன்னார் ரஃபி. 

"பழைய கதைகளை மட்டுமே பேசிக் கொண்டிருந்தால் நாம் எங்குமே நகர முடியாது. மாற்றத்தில் இணைய வேண்டியது அவசியம் என்பது என் கருத்து,”  

இரண்டு தலைமுறைகள் இணைந்து பணியாற்றும்போது கிடைக்கின்ற அனுகூலங்களை சிந்தித்துப் பார்த்தால், நாம் செய்யும் தொழில் சிறப்பாக இருக்கும் என ரவி  குறிப்பிட்டார்.

"ஒருவர் மற்றவரது வயதையும், திறமையையும் மதித்தால் தலைமுறை இடைவெளி என்ற பேச்சுக்கே இடமில்லை,"

என்று இருவரும் முத்தாய்ப்பாய் முடித்தனர். 
 

மேலும் செய்திகள் கட்டுரைகள்