Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஒலிம்பிக் போட்டியில் இம்முறை அவ்வளவு நெருக்குதல் இல்லை - ஜோசஃப் ஸ்கூலிங்

ஒலிம்பிக் நீச்சல் வெற்றியாளர்  ஜோசஃப் ஸ்கூலிங் (Joseph Schooling) இம்முறை தமக்கு ஒலிம்பிக் போட்டியில் அவ்வளவு நெருக்குதல் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
ஒலிம்பிக் போட்டியில் இம்முறை அவ்வளவு நெருக்குதல் இல்லை - ஜோசஃப் ஸ்கூலிங்

(படம்: Facebook/Team Singapore காணொளி)

ஒலிம்பிக் நீச்சல் வெற்றியாளர் ஜோசஃப் ஸ்கூலிங் (Joseph Schooling) இம்முறை தமக்கு ஒலிம்பிக் போட்டியில் அவ்வளவு நெருக்குதல் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

CNA-வுக்கு தோக்கியோவில் இருந்து பேட்டி கொடுத்த போது ஸ்கூலிங் அதைத் தெரிவித்தார்.

கடந்த சில ஆண்டுகளாக நீச்சல் போட்டியில் தாம் பல வெற்றி, தோல்விகளைச் சந்தித்துள்ள நிலையில் இம்முறை தம்மால் முடிந்த அளவு போட்டியில் திறமையை வெளிக்காட்டவிருப்பதாகக் கூறினார்.

"போட்டியில் வெற்றி பெறுவதுதான் இலக்கு, பதக்கம் கிடைத்தால் மகிழ்ச்சி, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் இம்முறை
களமிறங்குகிறேன்" என்றார் 26 வயது ஸ்கூலிங்.

மீண்டும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க வாய்ப்புக் கிடைத்தது மகிழ்ச்சி, போட்டியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் என்றார் அவர்.

ஜூலை 27ஆம் தேதி ஸ்கூலிங் 100 மீட்டர் எதேச்சை பாணி நீச்சல் போட்டியின் தேர்வுச் சுற்றில் கலந்துகொள்ளவிருக்கிறார்.

சிங்கப்பூருக்கு முதல் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வாங்கிக் கொடுத்தவர் ஜோசஃப் ஸ்கூலிங் (Joseph Schooling).

2016 ரியோ டி ஜெனிரோ (Rio de Janeiro)
ஒலிம்பிக் விளையாட்டுகளில், ஆண்களுக்கான 100 மீட்டர் வண்ணத்துப் பூச்சி பாணி நீச்சல் போட்டியை 50.39 வினாடிகளில் முடித்து அவர் தங்கம் வென்றார்.

அது ஒலிம்பிக் சாதனை நேரம்.

சிங்கப்பூரின் ஒலிம்பிக் கட்டமைப்பாக மீடியாகார்ப், தோக்கியோ 2020 போட்டிகளை மிக விரிவாக உங்களுக்கு வழங்கவிருக்கிறது.
மேல்விவரங்களுக்கு mediacorp.sg/tokyo2020 என்ற இணையத்தளத்தை நாடவும். 

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்