Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

Omicron கிருமித்தொற்று - துணை ரகம் BA.2 ...அதன் பாதிப்பு?

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் ஓமக்ரான் கிருமித்தொற்றுக்கு ஆளானோரில் சுமார் 15 விழுக்காட்டினருக்கு BA.2 வகைத் தொற்று ஏற்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். 

அதுகுறித்து நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்குத் திரு. ஓங் யீ காங் எழுத்துபூர்வமாகப் பதிலளித்தார். 

வெளிநாட்டில் நடத்தப்பட்ட முதற்கட்ட ஆய்வுகளின்படி, BA.2 ரக ஓமக்ரான் தொற்று மேலும் எளிதில், விரைவில் பரவக்கூடியது என்று தெரியவந்ததாக அவர் சொன்னார். 

இருப்பினும், அந்தத் துணை ரகக் கிருமிக்கு  BA.1 ரக ஓமக்ரான் கிருமியைவிடக் கடுமையாக நோயை ஏற்படுத்தும் தன்மை இருக்கிறது என்று குறிப்பிடுவதற்கு ஆதாரம் இல்லை என்பதை அவர் சுட்டினார். 

துணை ரகத்துக்கு எதிராகத் தடுப்புமருந்தின் செயலாற்றல் குறையும் என்று சொல்வதற்கும் சான்றுகள் இல்லை என்று திரு. ஓங்  தெரிவித்தார். 

சுகாதார அமைச்சு அனைத்து COVID-19 கிருமி வகைகளையும் தொடர்ந்து அணுக்கமாகக் கவனிக்கும் என அமைச்சர் ஓங்  கூறினார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்