Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தற்போதைய COVID-19 பரவல் முன்னைய ஓமக்ரான் பரவல் அளவுக்குக் கடுமையாக இருக்காது: சுகாதார அமைச்சர் ஓங்

வாசிப்புநேரம் -
தற்போதைய COVID-19 பரவல் முன்னைய ஓமக்ரான் பரவல் அளவுக்குக் கடுமையாக இருக்காது: சுகாதார அமைச்சர் ஓங்

(CNA / Gaya Chandramohan)

சிங்கப்பூரில் தற்போது பரவி வரும் COVID-19 முந்தைய ஓமக்ரான் பரவல் அளவுக்குக் கடுமையாக இருக்காது என்று சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் கூறியிருக்கிறார். 

நாடாளுமன்ற உறுப்பினர் ஆங் வெய் நெங் (Ang Wei Neng) எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தார். 

BA.4, BA.5 கிருமிப் பிரிவுகள் குறித்து அறிந்தபோதே இதன் பரவலை அதிகாரிகள் எதிர்பார்த்ததாகச் சொன்னார் திரு ஓங்.

அரசாங்கம் இது ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பரவும் என்று எதிர்பார்த்தது. ஆனால் முன்கூட்டியே பரவத் தொடங்கிவிட்டது என்றார் அவர். 

பலர் Booster தடுப்பூசி போட்டுக்கொண்டு விட்டனர். மேலும் பலர் நோய்த்தொற்றிலிருந்து மீண்டுவிட்டனர். அதனால் மக்களின் எதிர்ப்புச் சக்தி வலுவடைந்திருக்கும்.

என்றார் அமைச்சர். 

இன்று கோவிட் எண்ணிக்கை 12,000க்கும் அதிகமாக இருக்கலாம். 

இந்நிலையில் சிங்கப்பூர் உச்சக்கட்டப் பரவலை  எதிர்நோக்குவதற்கான அறிகுறிகள் தென்படுவதாகத் திரு ஓங் கூறினார். 

சிங்கப்பூர் மருத்துவமனைகளின் வேலைச்சுமை அதிகரிக்காத பட்சத்தில் நோய்ப்பரவலைக் கையாள அவை தயாராக இருப்பதாய்த் திரு ஓங் சொன்னார். 

முடிந்தவரை மீண்டும் கட்டுப்பாடுகளைக் கொண்டுவராமல் கிருமிப்பரவலுடன் தொடர உறுதியுடன் இருக்கவேண்டும் என்றார் அமைச்சர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa