Skip to main content
சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்த உல்லாசக் கப்பலில் தீ
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்த உல்லாசக் கப்பலில் தீ - மாண்டவர் இந்தோனேசியர்

வாசிப்புநேரம் -
சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்த உல்லாசக் கப்பலில் தீ - மாண்டவர் இந்தோனேசியர்
படம்: CNA/Matthew Mohan
வெளியீடு : 20 Feb 2026 12:34PM புதுப்பிப்பு : 20 Feb 2026 02:49PM

சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்த உல்லாசக் கப்பலில் ஏற்பட்ட தீச்சம்பவத்தில் மாண்டவர் இந்தோனேசியர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

அவர் கப்பல் சிப்பந்திகளில் ஒருவர்.

அவரது உடல் கரைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம் (MPA) தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரிலுள்ள இந்தோனேசியத் தூதரகத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கப்பலின் 9ஆவது அடுக்கில் தீ மூண்டது.

இன்று அதிகாலை 4 மணிக்குச் சம்பவம் நேர்ந்தது.

சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் தீயை அணைக்க உதவினர்.

World Legacy எனும் அந்தக் கப்பல் லைபீரியாவில் பதிவு செய்யப்பட்டது.

சம்பவம் பற்றி அறிந்துள்ளதாக உல்லாசக் கப்பல் நிறுவனம் CNA ஊடகத்திடம் தெரிவித்தது.

அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக அது கூறியது.

பயணிகள், சிப்பந்திகளின் பாதுகாப்பே முக்கியம் என்றது நிறுவனம்.

கப்பலிலிருந்து முதல் குழுவாக 190 பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்கள் HarbourFront படகு முனையத்தில் இறங்கினர்.

இரண்டாம் குழுப் பயணிகளைக் கப்பலிலிருந்து வெளியேற்றும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

மற்ற சிப்பந்திகளும், பயணிகளும் காயமடைந்ததாகத் தகவல் இல்லை என்று சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம் (MPA) முன்னதாகத் தெரிவித்தது.

கப்பலில் 388 சிப்பந்திகளும் 271 பயணிகளும் இருந்தனர்.

பயணிகளில் 139 பேர் சிங்கப்பூரர்கள்.

திருத்தம்: சிங்கப்பூர்க் கடல்துறை, துறைமுக ஆணையம் (MPA) அளித்துள்ள அண்மையத் தகவல்களின்படி பாதிக்கப்பட்ட பயணிகளின் எண்ணிக்கையும் சிங்கப்பூரர்களின் எண்ணிக்கையும் திருத்தப்பட்டுள்ளன.

ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்