Skip to main content
AI நிபுணர்களை சிங்கப்பூருக்கு ஈர்க்கப் புதிய ONE Pass விசா திட்டம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

AI நிபுணர்களை சிங்கப்பூருக்கு ஈர்க்கப் புதிய ONE Pass விசா திட்டம்

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

செயற்கை நுண்ணறிவுத் (AI) துறையில் தலைசிறந்த திறனாளர்களைச் சிங்கப்பூருக்கு ஈர்க்கப் புதிய விசா திட்டம் அறிமுகம் செய்யப்படவிருக்கிறது.

திறன்வாய்ந்த வெளிநாட்டினரை ஈர்க்கும் ONE Pass வேலை அனுமதித் திட்டத்தின்கீழ் புதிய விசா அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வழங்கப்படும்.

தற்போது உள்ள Tech.Pass வேலை அனுமதிக்குப் பதிலாக புதிய விசா திட்டம் நடப்புக்குவரும். 

மனிதவள அமைச்சர் டான் சீ லெங் அந்த விவரங்களை நாடாளுமன்றத்தில் வெளியிட்டார்.

Tech.Pass வேலை அனுமதிக்குத் தகுதிபெற மாதத்துக்குக் குறைந்தது 22,500 வெள்ளி சம்பளம் இருக்கவேண்டும். 

--புதிய ONE Pass திட்டத்தின்கீழ் AI திறனாளர்கள் மாதத்துக்குக் குறைந்தது 30,000 வெள்ளி சம்பளம் பெறவேண்டும். 

--அதில் குறைந்தது 22,500 வெள்ளி சம்பளமாகவும் எஞ்சிய பணம் நிறுவனப் பங்குகளாகவும் இருக்கலாம்.

--ONE Pass திட்டத்துக்குத் தகுதிபெறத் திறனாளர்கள் நிறுவனத்தின் முக்கிய பொறுப்புகளில் இருந்திருக்கவேண்டும்.

--அதற்கு முந்திய 10 ஆண்டுகளுக்குத் தொழில்நுட்பத் துறையில் இருந்திருக்கவேண்டும்.

--நிறுவனத்தின் மதிப்பு குறைந்தது 500 மில்லியன் டாலராக இருந்திருக்கவேண்டும் அல்லது அதன் வருடாந்திர வருவாய் குறைந்தது 200 மில்லியன் டாலராக இருந்திருக்கவேண்டும் அல்லது நிறுவனத்தின் நிர்வாகச் சொத்து மதிப்பு குறைந்தது 500 மில்லியன் டாலராக இருந்திருக்கவேண்டும்.

-30 மில்லியன் டாலர் நிதி திரட்டிய நிறுவனங்களைச் சேர்ந்த திறனாளர்களும் ONE Pass திட்டத்துக்குத் தகுதிபெறலாம்.

சிங்கப்பூரில் தற்போது 8,000க்கும் அதிகமானோர் ONE Pass திட்டத்தின் கீழ் உள்ளனர்.

ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்