Skip to main content
"ஓங் பெங் செங்கின் நிரந்தரவாசத் தகுதியில் மாற்றம் இல்லை"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

"ஓங் பெங் செங்கின் நிரந்தரவாசத் தகுதியில் மாற்றம் இல்லை"

வாசிப்புநேரம் -
"ஓங் பெங் செங்கின் நிரந்தரவாசத் தகுதியில் மாற்றம் இல்லை"
கோப்புப் படம்: CNA/Jeremy Long
செல்வந்தர் ஓங் பெங் செங்கின் நிரந்தரவாசத் தகுதியில் மாற்றம் இல்லை என்று குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதற்குப் பதிலாக அவருக்கு எச்சரிக்கைக் கடிதம் வழங்கப்பட்டது. மீண்டும் குற்றம் புரிந்தால் நிரந்தரவாசத் தகுதி பறிக்கப்படலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் எஸ். ஈஸ்வரனுக்கு லஞ்சம் வழங்கியதாக ஓங் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. குற்றத்தை ஒப்புக்கொண்ட அவருக்கு 30,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு அவருடைய நிரந்தரவாசத் தகுதியை ஆணையம் மறுஆய்வு செய்தது.

குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்ட நிரந்தரவாசிகளின் தகுதி பறிக்கப்படுமா என்று நாடாளுமன்ற உறுப்பினர் டென்னிஸ் டான் (Dennis Tan) கடந்த செப்டம்பர் மாதம் நடந்த நாடாளுமன்றக்கூட்டத்தில் கேள்வி எழுப்பினார்.

தகுதி பறிக்கப்படக்கூடும் என்று உள்துறை அமைச்சர்
கா. சண்முகம் கேள்விக்குப் பதில் அளித்திருந்தார்.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்