Skip to main content
இணையத் தேர்தல் விளம்பரம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இணையத் தேர்தல் விளம்பரம் - விவரம் தந்தது தேர்தல்துறை

வாசிப்புநேரம் -
இணையத்தில் தேர்தல் விளம்பரம் செய்பவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளைத் தேர்தல் துறை இன்று வெளியிட்டுள்ளது.

சமூக ஊடகம், வலையொலி, இணையத்தளம், மின்னஞ்சல் ஆகியவற்றின் மூலம் வேட்பாளர்கள் வாக்காளர்களை அணுகலாம்.

இணையத் தேர்தல் விளம்பரம் (Online Election Advertising) மேற்கொள்ளும் வேட்பாளர்கள் நாடாளுமன்றத் தேர்தல் சட்டம் 1954 மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் விதிமுறை 2024 ஆகியவற்றைப் பின்பற்ற வேண்டும்.

வேட்பாளர்கள் வெளிப்படையாக, பொறுப்பாக நடப்பதை உறுதிசெய்வது அந்தச் சட்டங்களின் நோக்கம்.

சிங்கப்பூர்க் குடிமக்கள் யாருமே கட்டணம் இல்லாத இணையத் தேர்தல் விளம்பரத்தை வெளியிடலாம்.

பிரசார ஓய்வு நாள், தேர்தல் தினம் ஆகிய இரண்டு தினங்களைத் தவிர்த்து மற்ற தினங்களில் விளம்பரத்தை வெளியிடலாம்.

ஆனால் கட்டணம் செலுத்தும் இணையத் தேர்தல் விளம்பரத்தை அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், தேர்தல் முகவர்கள், அதிகாரபூர்வமான மூன்றாம் தரப்பினர் ஆகியோர் மட்டுமே வெளியிட அனுமதி உண்டு.

தேர்தலில் போட்டியிடக்கூடிய உத்தேச வேட்பாளர்கள் குறித்துப் பொதுமக்கள் தேர்தல் துறையின் இணையத்தளத்தில் பார்க்கலாம்.
 
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்