இணையத்தில் சிறார்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் - ஐந்தாண்டு இல்லாத உச்சம்

சிங்கப்பூரில் இணையத்தில் சிறார்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களின் எண்ணிக்கை கடந்த ஐந்தாண்டு இல்லாத உச்சத்தை எட்டியிருக்கிறது.
ஐந்தாண்டுக்குமுன் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது.
அதன்பிறகு அந்தக் குற்றங்களுக்காகத் தண்டனை விதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு ஆக அதிக அளவைத் தொட்டது.
கடந்த சில ஆண்டுகளில் குற்றச்சாட்டுகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வந்திருக்கிறது.
இணையத்தில் பிள்ளைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகக் கடந்த ஆண்டு 27 பேர் மீது குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டது.
24 பேருக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
புதிய சட்டத்திருத்தம் 2020 ஜனவரி முதல் தேதி அறிமுகமானது.