Skip to main content
The Online Citizen நடத்துவோர் இணையம் மூலம் பணம் சம்பாதிக்கத் தடை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

The Online Citizen நடத்துவோர் இணையம் மூலம் பணம் சம்பாதிக்கத் தடை

வாசிப்புநேரம் -
The Online Citizen அமைப்பு அதன் இணையத்தளம், சமூக ஊடகத் தளங்கள் ஆகியவற்றின் வழி பணம் சம்பாதிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் அதிகமான பொய்த்தகவல் இடம்பெற்றதால் அது கட்டுப்படுத்தப்பட்ட இணையத்தளமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு சொன்னது.

இரண்டாம் முறையாக The Online Citizen அமைப்புக்கு இந்தத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. முதல் முறை 2023ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஈராண்டுத் தடை விதிக்கப்பட்டது.

கட்டுப்படுத்தப்பட்ட இணையத்தளமாக இருந்தாலும் அது 8 முறை மரணத் தண்டனை, நிதி உதவி ஆகியவற்றைப் பற்றிப் பொய்த் தகவல்களை வெளியிட்டிருக்கிறது. அதனால் மீண்டும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

புதிய தடை ஜூலை 22ஆம் தேதியில் நடப்புக்கு வரும். 2027ஆம் ஆண்டு ஜுலை 21ஆம் தேதிவரை அது கட்டுப்படுத்தப்பட்ட இணையத்தளமாக இருக்கும்.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்