Skip to main content
தீமிதித் திருவிழா
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

தீமிதித் திருவிழா - நாளை முதல் இணையத்தில் பதியலாம்

வாசிப்புநேரம் -
 தீமிதித் திருவிழா - நாளை முதல் இணையத்தில் பதியலாம்

படம்: மெலிசா

தீமிதித் திருவிழா அக்டோபர் மாதம் 12ஆம் தேதி நடைபெறவிருப்பதை முன்னிட்டு இணையப் பதிவுகள் நாளை (செப்டம்பர் 4) தொடங்குகின்றன.

அக்டோபர் 11ஆம் தேதி வரை இணையத்தில் பக்தர்கள் பதிந்துகொள்ள முடியும்.

பால்குடம், அங்கப்பிரதட்சணம், கும்பிடுதண்டம், தீ மிதித்தல் ஆகிய நேர்த்திக்கடன்களில் பங்கேற்பதற்கு இணையம்வழி பதிந்துகொள்வது கட்டாயம் என்று இந்து அறக்கட்டளை வாரியம் இன்று வெளியிட்ட அறிக்கையில் மீண்டும் நினைவூட்டியது.

ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்திற்கு நேரடியாகச் சென்று நுழைவுச்சீட்டுகளை வாங்கிக்கொள்ள முடியாது என்பதையும் அது தெரிவித்தது.

தீமிதித் திருவிழா வாரியத்தின் Youtube பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்