Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரின் ஒலிம்பிக் விளையாட்டாளர்கள் பேருந்தில் ஊர்வலம்... மக்கள் உற்சாகம்...

வாசிப்புநேரம் -
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற சிங்கப்பூர் விளையாட்டாளர்கள் இன்று காலை பேருந்தில் ஊர்வலமாக அழைத்துச்செல்லப்படுகின்றனர்.

நகர உலா காலை சுமார் 11.30 மணிக்குத் தொடங்கியது.

ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற Kitefoil நீர் சாகச விளையாட்டு வீரர் மேக்ஸ் மேடர் (Max Maeder), ஓட்டப்பந்தய வீரர் மார்க் பிரையன் லூயிஸ் (Marc Brian Louis), பேட்மின்ட்டன் வீராங்கனை இயோ ஜியா மின் (Yeo Jia Min) உள்ளிட்ட விளையாட்டாளர்கள் ஊர்வலத்தில் பங்கேற்கின்றனர்.

பேருந்து நிற்கும் இடங்கள்:

ஒலிம்பிக் விளையாட்டாளர்களைக் கொண்டாட மொத்தம் ஐந்து "Cheer points" இடங்கள் உள்ளன.

- மரினா பே சாண்ட்ஸிலிருந்து காலை 11.45க்குப் பேருந்து புறப்படும்.

- 12 மணிக்கு சைனாடவுன் சென்றடையும்.

- 12.20க்கு ஆர்ச்சட் ரோட்டில் நிற்கும்.

- 12.40க்கு சிராங்கூன் ரோட்டைக் கடந்துசெல்லும்.

- 12.45க்கு விக்டோரியா ஸ்ட்ரீட்டுக்குச் செல்லும்

சிங்கப்பூர் ஒலிம்பிக் விளையாட்டாளர்களைச் சந்தித்து அழகிய தருணங்களைப் பகிர்ந்துகொள்ளக் கிடைக்கும் வாய்ப்பைச் சிங்கப்பூரர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பதாக ஏற்பாட்டாளர்கள் கூறினர்.
படம்: CNA/Fabian Koh
படம்: CNA/Syamil Sapari
படம்: CNA/Abigail Ng
படம்: CNA/Jeremy Long
படம்: CNA/Jeremy Long
படம்: CNA/Jeremy Long
படம்: CNA/Justin Ong
ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்