பொதுத்தேர்தல் 2025: புதிய முகங்களை அறிமுகம் செய்யும் எதிர்க்கட்சிகள்
வாசிப்புநேரம் -

மக்களைச் சந்திக்கும் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் திருவாட்டி ஸ்டெஃபனி டான் (படம்: Facebook/Progress Singapore Party)
சிங்கப்பூரில் பொதுத்தேர்தல் வரும் மாதங்களில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் பல்வேறு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த புதுமுகங்கள் தீவெங்கும் காணப்படுகின்றனர்.
பாட்டாளிக் கட்சி, சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி, சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் அதில் அடங்குவர்.
பாட்டாளிக் கட்சிப் புதுமுகங்களில் ஒருவர் திரு கென்னத் தியோங் (Kenneth Tiong).
அல்ஜூனிட் குழுத்தொகுதியில் கடந்த ஆண்டுமுதல் (2024) அவர் குடியிருப்பாளர்களைச் சந்தித்துக்கொண்டிருக்கிறார்.
தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சில்வியா லிம் (Sylvia Lim), ஃபைசல் மனாப் (Faisal Manap) போன்றோரை அவருடன் அடிக்கடி பார்க்கலாம்.
குழுவில் சேர்ந்தால் தொழில்நுட்ப நிர்வாகியான திரு தியோங் 2023 ஜூலையில் பதவி விலகிய திரு லியோன் பெரேராவின் (Leon Perera) இடத்தை நிரப்பக்கூடும்.
கட்சியின் மற்றோர் உறுப்பினர் ஆண்ட்ரே லோவும்(Andre Low) நாடாளுமன்ற உறுப்பினர் ஜெரால்ட் கியாமுடன் (Gerald Giam) சமூக ஊடகத்தில் வலம் வருகிறார்.
33 வயது திரு லோ செங்காங் நாடாளுமன்ற உறுப்பினர் லூயிஸ் சுவாவின் (Louis Chua) நிர்வாக உதவியாளராக மூவாண்டுக்குமேல் சேவையாற்றியவர்.
அங்கு அடித்தள நிகழ்ச்சிகளில் முக்கியப் பங்காற்றினார்.
அண்மையில் தெம்பனிசில் மக்களைச் சந்திக்கிறார்.
சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் புதுமுகம் திருவாட்டி ஸ்டெஃபனி டான் (Stephanie Tan) கிளமெண்டியில் கட்சி நிறுவனர் டான் செங் போக்குடன் (Tan Cheng Bock) காணப்பட்டார்.
சக கட்சி உறுப்பினர்களும் அங்கிருந்தனர்.
முழுநேர இல்லத்தரசி என்று அறிமுகம் செய்யப்பட்டுள்ள திருவாட்டி டானுக்கு இரண்டு இளம்பிள்ளைகள்.
சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைகழகச் சட்டத்துறைப் பட்டதாரி.
சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி மார்சிலிங் இயூ டீ குழுத்தொகுதியில் அடியெடுத்து வைக்கிறது.
18 ஆண்டுக்குமேல் கட்சி உறுப்பினராக உள்ள திருவாட்டி சுராயா அக்பர் (Surayah Akbar) அந்த முயற்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறார்.
கட்சிப் பொருளாளர், கட்சியின் மத்தியச் செயற்குழுவில் நிதித்திரட்டுத் தலைவர்.
இசைப் பதிப்பாளரான திருவாட்டி அக்பர் பல்வேறு சமூக மாற்றங்களுக்குக் குரல் கொடுத்துள்ளார்.
ஒற்றைத் தாய்மாருக்குக் கூடுதல் ஆதரவளிப்பது அதில் அடங்கும்.

ஆதாரம் : CNA