" வெளிநாட்டுத் தரப்புகளைச் சந்திக்கும்போது அனைத்துலகச் சட்ட விவகாரங்கள் பற்றிப் பேசுவது அபத்தமானது"
படம்: CNA
This audio is generated by an AI tool.
மூத்த அமைச்சர் கா. சண்முகம் - சிங்கப்பூர்ப் பிரதிநிதிகள் வெளிநாட்டுப் பிரதிநிதிகளைச் சந்திக்கும்போது
அனைத்துலகச் சட்ட விவகாரங்கள் பற்றிப் பேசவேண்டும் என்று கூறுவது அபத்தமானது, விநோதமானது என்று தெரிவித்துள்ளார்.
வெளியுறவு அமைச்சின் பிரதிநிதிகள் இஸ்ரேலிய அதிகாரிகளைச் சந்தித்தபோது இஸ்ரேலியக் குடியிருப்புகள் பற்றிய சிங்கப்பூரின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்க வேண்டும் என்று பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஃபட்லி ஃபவுஸி (Fadli Fawzi) கூறியதற்கு அவர் அவ்வாறு பதிலளித்தார்.
திரு ஃபட்லியின் கருத்து சிங்கப்பூரின் அனைத்துலக உறவுகளை இன, சமய அடிப்படையில் பார்க்க மக்களைத் தூண்டுவதாகவும் அது தவறு என்றும் திரு சண்முகம் குறிப்பிட்டார்.
அந்தக் குற்றச்சாட்டைத் திரு ஃபட்லி மறுத்தார்.
பொருத்தமான சூழலில் மட்டுமே அக்கறைகளை எழுப்பவேண்டும் என்று கூறுவதாக அவர் சொன்னார்.
இந்தச் சூழலில் இஸ்ரேலியக் குடியிருப்புகள் பற்றி அக்கறை தெரிவிப்பது பொருத்தமானதே என்று திரு ஃபட்லி குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் அமைச்சர்களாகவும் இருப்போர் அனைத்துலகச் சட்டத்தின் கொள்கைகளோடு, முக்கியமாக சிங்கப்பூரர்களின் நலன்களையும் பாதுகாக்கவேண்டும் என்பதை மூத்த அமைச்சர் சண்முகம் வலியுறுத்தினார்.