Skip to main content
ஆர்ச்சர்ட் ரோட்டில் பேருந்து மீது போத்தல் வீசியெறியப்பட்டது
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

ஆர்ச்சர்ட் ரோட்டில் பேருந்து மீது போத்தல் வீசியெறியப்பட்டது - ஒருவருக்குக் காயம்

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஆர்ச்சர்ட் ரோட்டில் சென்றுகொண்டிருந்த பேருந்து மீது போத்தல் வீசப்பட்டதால் உள்ளே அமர்ந்திருந்த பெண் பயணி காயமடைந்திருக்கிறார்.

பேருந்து எண் 190இல் நேற்று மாலை ஆறே முக்கால் மணியளவில் அந்தச் சம்பவம் நடந்ததாக SMRT நிறுவனம் தெரிவித்தது.

ஓட்டுநர் பேருந்தைப் பாதுகாப்பாக நிறுத்திவிட்டுப் பயணிகளைச் சோதித்ததாகவும் பாதிக்கப்பட்ட பயணிகள் வேறொரு பேருந்துக்கு மாற்றப்பட்டதாகவும் SMRT கூறியது.

காயமுற்ற 57 வயதுப் பெண் பயணி ராபிள்ஸ் (Raffles) மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் காவல்துறையும், சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.

போத்தல் வீசப்பட்டதில் இரண்டடுக்குப் பேருந்தின் மேல்மாடி கண்ணாடிச் சன்னல் சேதமுற்றது.

காவல்துறையின் விசாரணையில் உதவி வருவதாக SMRT கூறியது.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்