Skip to main content
"Liat Towers கூரை விழுந்ததில் கர்ப்பிணி காயம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

"Liat Towers கூரை விழுந்ததில் கர்ப்பிணி காயம் - பெரும் சத்தம் கேட்டது"

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ஆர்ச்சர்ட் ரோட்டில் உள்ள Liat Towers கட்டடத்தின் வெளியே உள்ள ஒரு மேற்கூரை விழுந்ததில் கர்ப்பிணி ஒருவர் காயமுற்றதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.

சம்பவத்தை நேரில் கண்ட திரு கூ 'செய்தி'யிடம் தகவல் அளித்தார்.

தாம் உடனே அவசர மருத்துவ உதவி வாகனத்தையும் காவல்துறையையும் தொடர்புகொண்டதாக அவர் கூறினார்.
Related article image
(படம்: மெலிசா)
கூரை விழுந்தபோது அவர் அருகில் இருந்த Shake Shack கடையில் வேலை செய்துகொண்டிருந்தார்.

மருத்துவ உதவி வாகனம் வருவதற்கு முன்பே வழிப்போக்கர்கள் கர்ப்பிணியை மீட்டெடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.

Liat Towers கட்டடத்தில் உள்ள Starbucks கடைக்கும் Swirl Lover கடைக்கும் இடையே உள்ள வெளிப்புற இடத்தில் இருந்த கூரை விழுந்தது.

அப்போது பெரும்பாலான வாடிக்கையாளர்கள் உள்ளே உட்கார்ந்திருந்ததாகத் திரு கூ தெரிவித்தார்.

சம்பவத்தின்போது Starbucks கடையினுள் இருந்த திரு டென்சல் (Denzel), விழுந்த கூரையின் கீழ் சுமார் 6 பேர் இருந்ததாகச் 'செய்தி'யிடம் கூறினார்.

பெரிய சத்தம் கேட்ட உடனே வெளியே சென்று பார்த்ததாக அவர் பகிர்ந்தார்.

தகடுகள், இரும்புக் கம்பிகள் விழுவதுபோன்ற சத்தம் கேட்டதாக அவர் சொன்னார்.

அவர் உட்பட சிலர் விரைந்து சென்று கூரையைத் தூக்கியதாகச் சொன்னார்.

ஓர் இளம் பெண்ணின் மூக்கிலிருந்து ரத்தம் கசிந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இன்று (12 செப்டம்பர்) மாலை சுமார் 4 மணிக்கு 541 ஆர்ச்சர்ட் ரோட்டில் உதவி கேட்டு அழைப்பு வந்ததாகச் சிங்கப்பூர்க் குடிமை தற்காப்புப் படை 'செய்தி'யிடம் சொன்னது.

ஒருவர் KK மகளிர், சிறார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருவர் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர் என்று அது குறிப்பிட்டது.
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்