Skip to main content
Cordlife $5 மில்லியன் இழப்பீடு கொடுக்க வழக்கு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

Cordlife $5 மில்லியன் இழப்பீடு கொடுக்க வழக்கு

வாசிப்புநேரம் -
Cordlife $5 மில்லியன் இழப்பீடு கொடுக்க வழக்கு
படம்: TODAY/Ooi Boon Keong
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

Cordlife குழுமத்தின் வாடிக்கையாளர்கள் குறைந்தது 5.45 மில்லியன் வெள்ளி இழப்பீட்டைக் கோரியுள்ளனர்.

அவர்கள் குழுமத்தில் வைத்திருந்த தொப்புள் கொடி ரத்தம் பாழாகியது அல்லது பாழாகும் நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

நேற்று முன்தினம் (டிசம்பர் 1) நிறுவனத்திற்கு எதிராக சிவில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது தெரியவந்ததாக Cordlife குறிப்பிட்டது.

அந்த வழக்கை ஒருவர் தொடுத்தார்.

குழுமத்தில் தொப்புள் கொடி ரத்தத்தை வைத்திருந்த வாடிக்கையாளர்கள் சார்பில் அந்த ஆடவர் வழக்குத் தொடுத்துள்ளார்.

109 தொப்புள் கொடி ரத்த மாதிரிகளை அவர்கள் குழுமத்தில் வைத்திருந்தனர்.

பாழாகிய ஒவ்வொரு மாதிரிக்கும் 50,000 வெள்ளி அல்லது நீதிமன்றம் விதிக்கும் இழப்பீட்டுத் தொகையை அவர்கள் கேட்கின்றனர்.

Cordlife குழுமம் புதிய தொப்புள் கொடி ரத்தத்தைச் சேகரிக்க, சோதிக்க, பதப்படுத்த அல்லது சேமித்துவைக்கச் சுகாதார அமைச்சு நவம்பர் 26ஆம் தேதி தடை விதித்தது.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்