Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

Organic முறையில் வளர்க்கப்படும் கோழிகளின் விலை அதிகரிப்பு

வாசிப்புநேரம் -

மலேசியா, பண்ணைக் கோழிகளின் ஏற்றுமதிக்குத் தடைவிதித்ததை அடுத்து Organic முறையில் வளர்க்கப்படும் கோழிகளின் விலை அதிகரித்துள்ளது.

மக்கள் மாற்றுத் தெரிவுகளை நாடுவதால் அவற்றுக்கான தேவை அதிகரித்துள்ளது.

சரக்கு விநியோகக் கட்டணங்கள் உயர்ந்துவருவதாலும் வாடிக்கையாளர்கள் விரைவில் இன்னும் அதிக விலையைச் செலுத்த நேரிடலாம் என்று கூறப்படுகிறது.

Organic முறையில் வளர்க்கப்படும் கோழிகள் இயற்கையான தானியத்தை மட்டுமே உட்கொள்கின்றன.

நோய் எதிர்ப்பு மருந்து எதுவும் அவற்றுக்குச் செலுத்தப்படுவதில்லை.

வழக்கமான பண்ணைக் கோழிகளைவிட Organic கோழிகளின் விலை மும்மடங்கு அதிகம்.

கடந்த வாரத்தில் மட்டும் அவற்றுக்கான தேவை 15 விழுக்காடு அதிகரித்துள்ளது.

மலேசியாவிலிருந்து தருவிக்கப்பட்ட கோழிகளின் இறுதித் தொகுதி விற்றுத் தீர்ந்துவிட்டதால் அந்த அதிகரிப்பு.

மற்ற நாடுகளிலிருந்து கோழியை வரவழைக்கக் கூடுதல் செலவாகிறது.

சிங்கப்பூர், பெரும்பாலான கோழிகளை அண்டை நாடுகளிடம் இருந்து தருவிக்கிறது.

ஆஸ்திரேலியா, நியூஸிலந்து போன்ற நாடுகளிலிருந்து கோழிகளை இறக்குமதி செய்யும்போது போக்குவரத்துச் செலவு அதிகமாகிறது.

இந்த நிலை தொடர்ந்தால், செலவில் ஒரு பகுதியை வாடிக்கையாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிவரலாம் என்று கூறப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்